குழந்தைக்கு பால் கொடுப்பது போல் போஸ்.! நடிகை மீது தாக்குதல்! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0
1432
gilu-joseph

கேரளாவில் தாய்மையை கொச்சைப்படுத்தியதாகவும், பொது ஊடகத்தில் ஆபாசமான புகைப்படத்தை வெளியிடதற்காக பிரபல மலையாள பத்திரிகை மீது பொதுநல வழக்கு தொடதரப்பட்டுள்ளது. அதோடு அந்த புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த மாடல் அழகியும் தாக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படித்தியுள்ளது.

actress gilu joseph

கேரளாவை சேர்ந்தவர் மாடல் அழகியானவர் கிலு ஜோசப் .1990 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர், தனது 18 வயதில் இருந்தே மாடலிங் துறையில் இருந்து வருகிறார், மேலும், ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் கேரளாவின் பிரபல கிரஹலட்சுமி பத்திரிகை அட்டை படத்தில், கிலுஜோசப் ஒரு குழந்தைக்கு பால் கொடுபது போல ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.

இந்த புகைப்படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. அதோடு புகைபடத்திற்கு போஸ் கொடுத்ததற்காக ஜிலு ஜோசப் தாக்குதலுக்கு உள்ளனார். மேலும், பத்திரிகை நிறுவனம் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜூன் 21 ஆம் தேதி கேரளாவில் உள்ள நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் தாய்பாலின் முக்கியத்துவம் குறித்து தான் இந்த கட்டுரை விலக்கி இருந்தது என்று பத்திரிகை தரப்பில் இருந்து ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த வழக்கிற்கு தீர்ப்பளித்த நீதிபதி ‘மனித உடலை கலைஞர்கள் எப்போதும் கொண்டாடுகின்றனர், அதற்கு சான்றாக அஜந்தா சிற்பங்கள் , ரவி வர்மா ஓவியங்கள் சான்றாகும். ஆபாசம் என்பது பார்ப்பவர்கள் கண்களில் தான் உள்ளது , அந்த பத்திரிகையில் வெளியான புகைப்படம் பெண்களை எந்த விதத்திலும் இழிவு படுத்துவதாக தெரியவில்லை’ என்று வழக்கை தள்ளுபடி செய்தனர்.