ஆட்டோகிராப் நடிகை கோபிகாவுக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்கிறாரா ..?

0
732

தமிழில் 2012 ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான “4 ஸ்டுடன்ட் ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கோபிகா. அதன் பின்னர் தமிழில் ஆட்டோக்ராப், தொட்டி ஜெயா, எம்டன் மகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Actress-Gopika

தமிழ் சினிமாவை விட மலையாள சினிமாவில் பிஸியாக நடித்து வந்த நடிகை கோபிகா, 2008 ஆம் ஆண்டு அஜிலீஷ் சக்கு என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வந்த கோபிகா, தனது கணவர், தான் படங்களில் நடிப்பதை கூறித்து எந்த ஒரு தடையும் செய்தது இல்லை என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

திருமணத்திற்கு பின்னர் மலையாளத்தில் “ஸ்வந்தம் லெக்ஹாகன் ” என்ற மலையாள படத்தில் நடித்து வந்தார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து இவருக்கு அமி என்ற மகளும், எய்டன் என்ற மகனும் பிறந்தனர். இதனால் தனது பிள்ளைகளை பார்த்துக்கொள்ள சிறிது ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒய்வெடுத்துக் கொண்டார்.

gopika

gopika-actress

நீண்ட இடைவெளிக்கு பிறகு 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “பார்ய அத்ர போற ” என்ற படத்தில் நடிகர் ஜெய்ராமிற்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை கோபிகா. அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட நடிகை கோபிகா, தற்போது தனது குடம்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை கோப்பிகாவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.