ஓணம் பண்டிகை போஸ்ட் – அதிகம் லைக் செய்யப்பட்ட டாப் 5 நடிகைகளின் புகைப்படங்கள். யார் முதலிடம் தெரியுமா ?

0
728
Actress
- Advertisement -

ஓணம் பண்டிகை முன்னிட்டு பிரபலங்கள் பதிவிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் போட்டிருக்கும் லைக்ஸ் குறித்த பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய திருவிழா தான் ஓணம். விஷ்ணுவின் பிறந்த நாளாகவும், வாமனர் அவதரித்த நாளாகவும் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடுகிறார்கள். கேரள மக்கள் இந்த பண்டிகையை ஜாதி மத வேறுபாடு இன்றி கொண்டாடுகிறார்கள்.

-விளம்பரம்-

இதை கேரளத்தின் அறுவடை திருநாள் என்றும் அழைப்பார்கள். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களும் ஓணம் கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகையை பிரபல நடிகர் நடிகைகளும் கொண்டாடி சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஓணம் பண்டிகையின் போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு அதிக லைக்ஸ் குவித்து இருக்கும் பிரபலங்களின் பட்டியலை தான் இங்கு பார்க்க போகிறோம்.

- Advertisement -

இவானா:

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்திருந்த நாச்சியார் படத்தில் இவானா நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் மிகவும் குட்டி பெண்ணாக இருந்திருப்பார். அதனை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் ஹீரோ படத்திலும் நடித்திருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த லவ் டுடே படத்தின் மூலம் தான். இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் இவானா இளசுகளின் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இதனை அடுத்து சமீபத்தில் பிரபல டோனி தயாரிப்பில் வெளிவந்த எல்ஜிஎம் என்ற படத்தில் இவானா நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பதிவிட்ட போஸ்ட்க்கு 5 லட்சம் லைக்ஸ்கள் குவிந்து இருக்கிறது. அதிக லைக்சுகளை வாங்கிய பிரபலங்களின் பட்டியலில் இவர் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறார்.

நஸ்ரியா:

தமிழில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் நஸ்ரியா. இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுத்து கொண்ட நஸ்ரியா தற்போது மீண்டும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் தன்னுடைய செல்லப்பிராணி உடன் சேர்ந்து ஓணம் பண்டிகை கொண்டாடிய போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இவருடைய புகைப்படத்திற்கு ஏழு லட்சம் லைக்ஸ் குவிந்து இருக்கிறது. இவர் நான்காம் இடத்தை பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அனுபாமா பரமேஸ்வரன்:

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த பிரேமம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் தான் அனுபமா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்து இருந்தார். தற்போது இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்களில் பிஸியாக நடித்து இருக்கிறார். தற்போது இவர் பாரம்பரிய உடையில் ஓணம் பண்டிகை செலபரேட் செய்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். இவருடைய புகைப்படத்திற்கு 9 லட்சம் லைக்ஸ் குவிந்து இருக்கிறது. இவர் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார்.

கல்யாணி பிரியதர்ஷன்:

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். இவர் முதலில் பாலிவுட் திரைப்படத்தில் துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து துணை கலை இயக்குனராக திரைப்படத்தில் பணி புரிந்து பின் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘ஹலோ’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . அதன் பின் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ என்ற படத்திலும் இவர் நடித்து இருந்தார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். மேலும், ஓணம் பண்டிகை போது இவர் பதிவிட்ட புகைப்படத்திற்கு பத்து லட்சம் லைக்ஸ் குவிந்து இருக்கிறது. இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்:

தென்னிந்திய சினிமா உலகில் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது முதல் இடத்தில் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் தான் இருக்கிறது. இவர் 14 லட்சம் லைக்ஸ்களை வாங்கி இருக்கிறார். இவர் தன்னுடைய செல்லப்பிராணியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டு ஓனம் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

Advertisement