உன் முடி நல்லா இருக்கு, உன் முகம் ஏன் இப்படி இருக்குனு கேட்டாங்க – 96 குட்டி ஜானு பதிவிட்ட ஷாக்கிங் புகைப்படம்.

0
5947
gowri
- Advertisement -

பொதுவாகவே பெண்கள் தன்னுடைய முகத்தோற்றத்தில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். ஒரு பெண் தன்னை மற்ற பெண்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது அன்றிலிருந்து இன்று வரை தொன்று தொட்டு வருகிறது. ஒரு பெண்ணின் தோற்றத்தையும், அவருடைய உருவத்தையும் குறித்து இணையும் தொடங்கிய காலத்தில் இருந்து கிண்டலும் கேலியும் அதிகமாக உள்ளது. குறிப்பாக சினிமா பிரபலங்கள் பலரையும் விமர்சித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகை கௌரி கிஷன் அவர்கள் முக சருமத்தினால் தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தமிழில் 96 படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன்.

-விளம்பரம்-

கௌரி கிஷன் தன்னுடைய ஒரு புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில் அவரைப் பற்றியும், அவரது முகம் பற்றியும் பலவிதமான விமர்சனங்களை தெரிவித்து இருக்கிறார்கள். அதிலும் சிலர் நீங்கள் உங்களுடைய முகம் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள் என்றும் கமெண்டு தெரிவித்து இருக்கிறார்கள். அதற்கு நடிகை கௌரி கூறியது, என்னுடைய சருமத்தில் சில சிம்பிள் பிரச்சினைகள் உள்ளது.

- Advertisement -

இதை எதிர்த்து நான் இரண்டு வருடமாக போராடுகிறேன். பின் நான் என்னுடைய சர்மத்திற்காக பெங்களூரில் உள்ள மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன். ஒரு வருடத்திற்கு முன்பு தான் இந்தப் பிரச்சினை தீர்ந்தது என்றும் அவர் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கௌரியின் சரும பிரச்சனை குறித்து அவருடைய அம்மா கூறியது, ஓரு முறை கௌரி கல்லூரியில் படிக்கும் போது தன்னுடைய முகத்தில் இருக்கும் பிம்பிள் புகைப்படத்தை எனக்கு பகிர்ந்து என்னை கிண்டல் கேலி செய்கிறார்கள் என்று அழுந்தால். அது இன்னும் ஞாபகம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

கடைசியாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது ஒருமுறை ஒரு டைலர் ஆன்ட்டி, என்னிடம் உன்னுடைய முடி நன்றாக இருக்கிறது ஆனால் உன் முகம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்டார். இறுவரை அது எனக்கு நினைவிருக்கிறது. அனைவரிடமும் நான் ஒரே ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன். நீங்கள் யாருடைய முகத்திலாவது இப்படி ஒரு குறை இருப்பதை கண்டீர்கள் என்றால் அதனை வெறும் 10 நொடிகளில் சரி செய்துவிட முடியாது. அதனால் அதைப்பற்றி அவரிடம் பேசுவதை தவிர்த்து அந்த விஷயத்தை சொல்லாமலேயே விட்டு விடுங்கள்

-விளம்பரம்-

தற்போது மருத்துவரின் ஆலோசனைபடி சிகிச்சைக்கு பிறகு நடிகை கௌரி கிஷன் முகம் பார்ப்பதற்கு மிக அழகாகவும் பிரம்மிக்கும் வகையில் மாறியுள்ளது. உண்மையாலுமே அந்த புகைப்படத்தில் இருப்பவர் கௌரியா என்று பலரும் கேட்டு வருகிறார்கள். ஏன்னா, கௌரி அந்த அளவிற்கு அடையாளம் தெரியாமல் சிம்பிள் முகத்துடன் இருந்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உள்ள மாஸ்டர் படத்தில் நடிகை கௌரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

Advertisement