அடடே, நடிகை ஹன்சிகாவிற்கு இவ்வளவு பெரிய அழகான வீடு- வைரலாகும் வீடியோ

0
463
- Advertisement -

ஹன்சிகா மோத்வானி பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் இவர் வேலாயுதம், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, மான் கராத்தே, அரண்மனை 1,2 , ரோமியோ ஜூலியட், போகன்,குலேபகாபலி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

நடிகை ஹன்சிகா அவர்கள் தமிழில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவுடன் இணைந்து துப்பாக்கி முனை என்ற படத்தில் நடித்திருந்தார். 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இடையில் இவர் சிம்புவுடனான காதலுக்கு பின்னர் படங்களில் கவனம் செலுத்தவில்லை. பின் சிம்பு-ஹன்சிகா காதல் பிரேக் அப் ஆனது. அதை அடுத்து நடிகை ஹன்சிகா நடன புயல் பிரபு தேவாவுடன் காதலில் இருந்ததாகவும் சில செய்திகள் வெளியாகி இருந்தது.

- Advertisement -

ஹன்சிகா திரைப்பயணம்:

ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாமல் இருந்தது. தற்போது இவர் நடித்து இருக்கும் படம் மஹா. இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது அம்மணி கையில் இருந்தது ஒரே ஒரு படம் மட்டும் தான். இருந்தாலும், ஹன்சிகா பார்ட்டி, கிளப் என தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றி சந்தோசமாக என்ஜாய் பண்ணி கொண்டு இருக்கிறார்.

ஹன்சிகா நடித்த மகா படம்:

சமீபத்தில் தான் ஹன்சிகா நடித்த மகா படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் மானஸ்வி, சிம்பு உட்பட பலர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். ஹன்சிகாவின் 50-வது படமாக ‘மஹா’ வெளியாகி இருக்கிறது. இப்படத்தை ஜமீல் இயக்கி இருக்கிறார். ‘எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட்’ இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தில் குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொலை நடக்கிறது.

-விளம்பரம்-

மகா படத்தின் கதை:

ஒரு சைக்கோ கொலைகாரனிடம் ஹன்சிகா குழந்தையும் மாட்டிக்கொள்கிறது. அந்த சைக்கோவிடம் இருந்து குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இந்த நிலையில் ஹன்சிகாவின் வீடு குறித்த வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே பிரபலங்கள் எல்லோரும் நடிப்பதை தாண்டி தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

ஹன்சிகா வீடு:

அதில், அவர்கள் தங்களுடைய வீடு, தாங்கள் செய்யும் செயல், வெளியே செல்லும் இடங்கள் குறித்து ஏதாவது ஒரு வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஹன்சிகாவும் யூடியூபில் தனியாக சேனல் ஒன்று ஆரம்பித்திருக்கிறார். தற்போது அவர் தன்னுடைய வீட்டின் வீடியோவை சேனலில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்தும் ட்ரெண்டிங் ஆக்கியும் வருகிறார்கள்.

Advertisement