தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் ஹிந்தியில் பல சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்து இருந்தார். பின்னர் இவர் தெலுங்கு படத்தின் மூலம் தான் வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாகினார். அதன் பின்னர் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இதற்கிடையில் ஹன்சிகா அவர்கள் தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் 2020ஆம் ஆண்டு தொழில் கூட்டாளியாக பயணித்து வந்தார்கள். பின் இவர்களது திருமணமானது 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்தது. சோஹைல் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். ஹன்சிகாவின் தோழியை தான் சோஹைல் முதல் திருமணம் செய்திருந்தார். இருந்தாலுமே ஹன்சிகாவுடன் காதல் ஏற்பட்டதால் முதல் மனைவியை சோஹைல் விவாகரத்து செய்தார். அதற்குப்பின் சோஹைல், ஹன்ஷிகாவை திருமணம் செய்து கொண்டார்கள்.
ஹன்சிகா விவாகரத்து:
திருமணமான சில வருடங்களிலேயே ஹன்சிகா- சோஹைல் உடைய உறவில் விரிசல் ஏற்பட்டது. இதை அடுத்து இருவருக்கும் சமீபத்தில் தான் விவாகரத்து கிடைத்தது. விவாகரத்திற்கு பிறகு இருவர் தரப்பிலிருந்தும் எந்த ஒரு தகவலுமே வெளியாகவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஹன்சிகா, மக்கள் எப்போதுமே பரபரப்பான செய்திகளை தான் எதிர்பார்ப்பார்கள். அந்த மாதிரியான செய்தி என் மூலம் அவர்களுக்கு கிடைத்தது. இதைப் பற்றி நான் என்ன கருத்து சொல்வேன் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=88xDUm0558Q
ஹன்சிகா பேட்டி:
என்னுடைய திருமண வாழ்வில் என்ன தவறு நடந்தது என்பதை குறித்து நான் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இனிமேலும் அதைப்பற்றி பேசவில்லை. ஏனெனில் அது எனக்கு ஒரு பொருட்டே கிடையாது. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒரு தவறான ரயிலில் ஏறிவிட்ட பிறகு அதில் பயணம் செய்து கஷ்டப்படுவதை விட அந்த ரயிலில் இருந்து இறங்கி விடுவது தான் சரியானது. நான் இயல்பாகவே ரொம்ப கலகலப்பான சந்தோஷமான சுபாவம் கொண்டவர். அப்படிப்பட்ட நான் ரொம்பவே மன அழுத்தத்தில் இருந்ததை என்னுடைய அம்மாவும் சகோதரனும் பார்த்தார்கள்.

விவாகரத்து பற்றி சொன்னது:
இதில் உனக்கு சந்தோஷம் இல்லை என்றால் வெளியே வந்து விடு. நீ என்ன முடிவு எடுத்தாலும் நாங்கள் துணையாக இருப்போம் என்று சொன்னார்கள். இன்று வரை எங்கள் இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என்பது யாருக்குமே தெரியாது. இரண்டு நபர்களுக்குள் நடக்கும் விஷயங்களுக்கு அவர்களுக்கு மட்டும்தான் தெரிந்திருக்க வேண்டும். அதைப் பற்றி வேறொருவர் கருத்து தெரிவிப்பதற்கு எதுவுமில்லை. என்னுடைய குடும்பத்திலிருந்து எனக்கு நிறைய அன்பும் ஆதரவும் கிடைக்கிறது. எனக்கு எந்த விதமான வருத்தங்களும் இல்லை. நான் இப்போது இருக்கும் நிலையில் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






