நாம் டிவி தொடர்களில் பார்த்த சிறுவர்கள் ஒரு சிலர் தீடீரென்று வளர்ந்து சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கி விடுகின்றனர். அந்த வகையில் “ஜி பூம் பா” என்ற சிறுவர்கள் தொடரில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கிவருபவர் நடிகை ஹன்ஷிகா மொத்வானி.
சினிமாதுறை பொறுத்த வரை கதாநாயகர்கள் சிக்ஸ் பேக் வைத்திருக்க வேண்டும், கதாநாயகிகள் என்றால் ஒல்லியாக தட்டையான உருவத்தில் இருக்க வேண்டும். இப்படி ஒல்லியான கதாநாயகிகளை பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு தனது கொழு கொழு உருவத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஹன்ஷிகா.
இவர் பார்ப்பதற்கு குஷ்பு போன்றே இருப்பதால் இவரை சின்ன குஷ்பு என்று கூட அழைப்பார்கள்.
இவரது அழகே இவரது பூசலான உடல் அமைப்பு தான். ஆனால், சமீப காலமாக தனது உடல் எடையை குறைத்து வருகிறார் நடிகை ஹன்ஷிகா. தற்போது தனது உடலை மேலும் குறைத்து மிகவும் ஓல்லியாகியுள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த ஒன் பிளஸ் 6 என்ற செல் போனை வாங்கி, தனது கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இது உடலில் தோல் மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாக மாறியுள்ளார்.