தூத்துக்குடியில் நடந்தேறி வரும் காவல் துறையினரின் வன்முறை ஆட்டத்தில் இதுவரை 13 பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மனைவியும் அடங்கும். இந்த கொடூர செயலுக்கு பல்வேறு தரப்பு மக்களும் தமிழக அரசை கண்டித்து வருகின்றனர்.
காவல் துறையினரின் இந்த அத்து மீறலுக்கு தமிழ் சினிமா நடிகர், நடிகைகளும் தங்களுது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் 144 தடை உத்தரவை மீறி சென்றதற்காக நடிகர் கலஹாசன் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமா காமெடி நடிகையான ஆர்த்தி காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து மிக கோவமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள “அம்மாவை (மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ) கொன்ற இவர்களுக்கு சாமான்ய மக்களை கொள்வது கஷ்டமா” என்று மிக காட்டமாக தந்து கருத்தை தெரிவித்துள்ளார்.
Ammavaiye konnavangalukku saamaanya makkalai kolluvathu kashtama??
— Actress Harathi (@harathi_hahaha) May 24, 2018
இந்த பதிவை பார்த்து ட்விட்டர் வாசி ஒருவர் “என்ன சம்மன் அனுப்பவா ” என்று ஆர்த்தியை கிண்டல் செய்யும் வகையில் ரீ ட்வீட் செய்துள்ளார். இதனை கண்டு கோபமடைந்த நடிகை ஆர்த்தி”என்ன பயமுறுத்திக்கிறாயா, ஏய் நான் ஏற்கனவே செம கடுப்புல இருக்க ,அமைதியா போயிடு துரோகிகளுக்கு சப்போர்ட் செய்யாத” என்று அந்த நபரை மிரளவைத்துள்ளார்