காதல் தோல்வி, கருக்கலைப்பு, தற்கொலை முயற்சி ? முதன் முறையாக மனம் திறந்த இலியானா.

0
1049
ileana-D'Cruz

“இருக்கானா இடுப்பிருக்கானா” என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் நடிகை இலியானா. இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடலிங்கும் ஆவார். மேலும், இவர் ‘தேவதாசு’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து இவர் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின் விஜய் அவர்கள் நடிப்பில் வந்த ‘நண்பன்’ படத்தில் நடித்திருந்தார். இவர் அதிகமாக தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தான் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இலியானா பாலிவுட்டில் தனெக்கென ஒரு அங்கீகாரத்தையும் பதித்தவர். நடிகை இலியானா அவர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோகிராஃபர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

ileana

இதனைத்தொடர்ந்து இலியானா காதல் குறித்து சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் வந்தன. சில ஆண்டுகளாக நடிகை இலியானா தன் காதலன் ஆண்ட்ரூவை காதலிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். பின் அவரை ’பெஸ்ட் ஹபி எவர்’ எனவும் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர்கள் காதல் செய்து கொண்டிருக்கும் போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து இருவருக்கும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களா??? என்று பலபேர் கேள்விகளை எழுதி இருந்தார்கள்.

- Advertisement -

இதனைத்தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது எனகூறப்பட்டது. அதனால், சில மாதங்களுக்கு முன் இவர்கள் உடைய காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாக இணையங்களில் பேசப்பட்டது. பின்னர் தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக இலியானா கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இலியானா கற்பமாக இருந்ததாகவும் அவர் கருக்கலைப்பு செய்ததாகவும் தகவல்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற இலியானா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், நான் கர்ப்பமாக இருந்தேன், கருக்கலைப்பு செய்தேன் என்றெல்லாம் சொன்னார்கள். உண்மையில் இது போன்ற விஷயங்களை எழுதினார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது. இது வினோதமானது,”நான் தற்கொலை செய்து கொண்டதாக மற்றொரு தகவலும் வந்தது. நான் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், உயிர் பிழைத்ததாகவும், என் வேலைக்காரி செய்தியை உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் எனக்கு வேலைக்காரியே இல்லை, நான் தற்கொலைக்கு முயற்சிக்கவும் இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன். இதுபோன்ற தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement