விஜய் 63 படத்தில் இணையவுள்ள மற்றும் ஒரு இளம் நடிகை..!வெளியான புதிய தகவல்.!

0
775

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கைகோர்துள்ளர்நாடிகர் விஜய்.தெறி,மெர்சல் போன்ற படங்களை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரது வெற்றிக்கூட்டணியில்’விஜய் 63′ திரைபடம் உறவாக உள்ளது. பெயரிடபடாத இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

indhuja

- Advertisement -

ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் விவேக் நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜயுடன் நடிக்கவுள்ளார். மேலும், விஜயுடன் மெர்சல், சர்க்கார் படத்தில் நடித்த யோகி பாபவும் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை இந்துஜா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேயாத மான் என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்த இந்துஜா சமீபத்தில் வெளியான ‘பில்லா பாண்டி’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

indhuja

தற்போது இவர், விஜய் 63 படத்திலும் கமிட் ஆகியுள்ளார் என்ற செய்தி இந்துஜா ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதை பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை, விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

Advertisement