மேயாத மான்’ படத்துல வர்ற அண்ணன் – தங்கச்சி போலவே நாங்க நிஜத்தில்- தனது அண்ணன் குறித்து பேசியுள்ள இந்துஜா.

0
1832
indhuja
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை துணை நடிகைகளாக இருந்து கதாநாயகியாக மாறியவர்கள் பட்டியல் மிகவும் குறைவு தான். அந்த வரிசையில் நடிகை இந்துஜாவும் ஒருவர். தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்கள். இதே படத்தில் வைபவ்வின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இந்த படத்தில் இடம்பெற்ற தங்கச்சி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

-விளம்பரம்-
Indhuja

- Advertisement -

மேயாதமான் திரைப்படத்திற்குப் பின்னர் பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் நடிகை இந்துஜா. மேயாத மான் படத்திற்கு பின்னர் மெர்குரி 60 வயது மாநிறம் பில்லாபாண்டி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார் இந்துஜா மேலும் கடந்த ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரமெடுத்தார் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார் இந்துஜா.

இதையும் பாருங்க : ரசிகர்களின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த தளபதி குடும்பத்தினர். வைரலாகும் வீடியோ.

அக்மார்க் தமிழ் பெண்ணான இந்துவாக பிறந்து வளர்ந்தது எல்லாமே வேலூரில் தான். மேலும் வி ஐ டி கல்லூரியில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்துள்ள இந்துஜா ஒருசில மாடலிங் ஆசைங்ன்மண்டையும் முடித்திருக்கிறார். இந்த நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இந்துஜா தனது குடும்பத்தார் பற்றியும் நண்பர்கள் பற்றியும் பேசியுள்ளார். அந்த பேட்டியின் மூலம் தனது அண்ணன் குறித்து பேசி இருக்கிறார் நடிகை இந்துஜா. அந்த பேட்டியில் பேசியுள்ள அவர் தனது அம்மா சங்கீதா குறித்து கூறுகையில் எனது அம்மா அவர்களுக்கு என்று செய்து கொண்டதை விட எங்களுக்கு செய்து தான் மிக அதிகம்.

-விளம்பரம்-
Indhuja Brother
தனது அண்ணன் கௌதமுடன் இந்துஜா

அவர் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்வதற்கு அம்மா என்கிற ஒரு விஷயம் மட்டும் போதும் என்று கூறியுள்ளார். மேலும், தனது அண்ணன் குறித்து பேசியுள்ள இந்துஜா, நானும் என்னுடைய அண்ணாவும் டாம் அண்ட் ஜெர்ரி போலத்தான் பயங்கரமாக சண்டை போடுவோம். சரியாக சொல்லவேண்டுமென்றால் ‘மேயாத மான்’ படத்தில் வரும் அண்ணன் தங்கை போல தான் நாங்கள் நிஜத்திலும். ஆனால், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்கள் வீட்டில் என்னை சினிமாவில் அனுமதித்ததறக்கு முக்கிய காரணமே என் அண்ணன் தான் காரணம். நான் சினிமாவில் இருப்பதால் டயட்டில் இருக்க வேண்டும் என்று என்னை சாப்பிடக்கூட விடாமல் பார்த்துக்கொள்ளும் பாசக்கார அண்ணன் அவன் என்று கூறியுள்ளார்

Advertisement