ரசிகர்களின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த தளபதி குடும்பத்தினர். வைரலாகும் வீடியோ.

0
1672
vijay-parents
- Advertisement -

சினிமா துறையில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்டவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவருடைய மகன் தான் நம்ப தளபதி விஜய். தந்தையைப் போலவே நம்ப தளபதி விஜய் அவர்கள் சினிமா துறையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது. 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக அறிமுகமானார். இவர் 40 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் பணியாற்றி வருகிறார்.

-விளம்பரம்-

தளபதி விஜய்யை உருவாக்கியதும் எஸ் ஏ சந்திரசேகர் தான். இவர் விஜய் மட்டுமில்லாமல் பல கலைஞர்களையும் உருவாக்கியுள்ளார். தளபதி விஜய் அவர்கள் இந்த அளவிற்கு புகழின் விஜய் இருப்பதற்கு காரணம் ஏ சந்திரசேகர் அவர்கள் தான். தமிழ் சினிமா உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளி வந்த பிகில் படம் திரையரங்களில் மாஸ் காட்டி தெறிக்க விட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : பேண்ட் எங்க ? கோவிலுக்கு இப்படி தான் போவீங்களா? ரம்யாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார். இந்த படம் கோடை விடுமுறை முன்னிட்டு திரை அரங்குக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். இந்நிலையில் தளபதி விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் வீட்டிற்க்கு சென்று உள்ளார் தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாக பரவி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு எல்லாம் தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க நேரில் செல்வது வழக்கமாக வைத்து இருந்தார்.

பின் இவருக்கு ரசிகர்களின் கூட்டம் சேர சேர ரசிகர்களை நேரில் சந்திப்பதை நிறுத்தி விட்டார். பின் தளபதி விஜய் பட ப்ரோமோசன் நிகழ்ச்சிகளிலும், இசை வெளியீட்டு விழாக்களில் மட்டும் தான் காண முடிந்தது. இந்த நிலையில் தற்போது விஜய்யின் பெற்றோர்கள் எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் இணைந்து விஜய்யின் ரசிகர் வீட்டிற்கு சென்று உள்ளார்கள். அப்போது விஜய் ரசிகர் இவர்களை வரவேற்க ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளார். பின் சோபா அவர்கள் ரசிகரின் சமையலறைக்கு சென்று சமைத்து உள்ளார். தற்போது இவர்கள் இருவரும் அந்த ரசிகர் வீட்டிற்கு சென்ற போது எடுத்துக் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து விஜய் ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்தும், பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement