அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் நீரில் கார் கவிழ்ந்து காதலனுடன் நடிகை பலி

0
1189
iswarya
- Advertisement -

அடுத்த மாதம் திருமணத்தை வைத்துக் கொண்டு கோவா சுற்றுலா சென்ற பிரபல நடிகை கார் கவிழ்ந்து தன் காதலுடன் அநியாயமாக பலியாகியுள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பூனாவை சேர்ந்தவர் மராத்தி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே. இவருக்கு தற்போது 25 வயது தான் ஆகிறது. இவர் இந்தியிலும் சில படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே அவர்கள் சுபம் டெட்ஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

-விளம்பரம்-
Goa Police reveal the main cause behind Marathi actress Ishwari Deshpande's  tragic death | Hindi Movie News - Bollywood - Times of India

பின் இவர்கள் இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி இருந்தார்கள். இந்த நிலையில் ஈஸ்வரி தேஷ்பாண்டே அவர்கள் தன் காதலுடன் கோவாவிற்கு காரில் சென்றுள்ளார். பாகா கடற்கரை சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அர்போரா கிராமத்திற்கு அருகே உள்ள குறுகிய சாலையில் கார் தன் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள சிற்றோடையில் கவிழ்ந்து விழுந்தது.

- Advertisement -

காருடன் சேர்ந்து நடிகையும் அவருடைய காதலனும் தண்ணீரில் மூழ்கினர். பின் தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சிற்றோடையில் கவிழ்ந்து விழுந்த கார் மற்றும் இருவரின் சடலங்களையும் பல மணி நேர போராட்டங்களுக்கு பிறகு தான் மீட்டெடுத்தார்களாம். பின் கைப்பற்றப்பட்ட உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து அஞ்சுனா காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் சுராஜ் கவாச் அவர்கள் கூறியிருப்பது, இந்த சம்பவம் குறித்து இரு குடும்பத்திற்கு தகவல் சொல்லி விட்டோம். அதுமட்டுமில்லாமல் விபத்தில் இறந்த இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகின்றனர். இது குறித்து நாங்கள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றோம் என்று கூறினார். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement