கோடி கோடியாய் பணம் இருந்து வரி கட்டாத உலக அழகி ஐஸ்வர்யா ராய் – அதுவும் எவ்வளவு பாருங்க.

0
377
aiswarya
- Advertisement -

வருடம் வருடம் புதிது புதிதாக எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து என்றும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய். இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் தற்போது கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர். 1997 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய “இருவர்” என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஐஸ்வர்யா ராய் அவர்கள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னனி நடிகையாக நிலைத்து இருந்தவர். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

குடும்ப வாழ்க்கை :

திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஆராத்யா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் படங்களில் நடித்து வருகிறார். மேலும், ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் அழகு பதுமையாகவே வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார். ஐஸ்வர்யா ராய் கர்நாடகாவை சேர்ந்தாலும் பல இடங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன. அந்த வகையில் தான் இவருக்கு மஹாராஷ்டிராவில் நிலம் இருக்கிறது.

வரி கட்டாத உலக அழகி :

இதில் பிரச்சனை என்னவென்றால் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னார் தில்லுகாவிற்கு உட்பட்ட தங்கோன் என்ற ஒரு கிராமத்தில் ஒரு 2 1/2 சென்ட் அதாவது 1 ஹெக்டர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு சில ஆண்டுகளாக ஐஸ்வர்யா ராஜ் நிலவரி கட்டவில்லை. இதனால் சம்மந்தப்பட்ட சின்னார் தாலுகா தாசில்தார், ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பினார்.

-விளம்பரம்-

சட்டப்படி நடவடிக்கை :

மேலும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டது என்னவென்றால் `இந்த நோட்டீஸ் கிடைத்த 10 நாட்களுக்குள் நிலா வரி மொத்தத்தையும் செலுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே பல முறை நோட்டீஸ் அனுப்பியும் நிலவரியை காட்டவில்லை என்றும், 21ஆயிரத்து 960 ரூபாய் தொகையை செலுத்தவில்லை என்றால் நிலவரி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதே போல அங்குள்ள நிலவரி செலுத்தாத 1200 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பேசுபொருளாக மாறிய பிரச்னை :

இந்த தகவல் சோசியல் மீடியாவிலும், தொலைக்காட்சிகளிலும் வைரலான நிலையில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவ்வளவு சம்பாரித்தும், அவ்வளவு சொத்துக்கள் இருந்தும் இந்த வரியை காட்டவில்லையா? என கேலி செய்து வருகின்றனர். அதோடு ஐஸ்வர்யா ராய் மிகவும் பிரபலமானவர் என்பதினால் இந்த தகவல் பாலிவுட் சினிமாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement