சலங்கை ஒலி பட நடிகை ஜெயப்பிரதா காணவில்லை? தீவிர தேடுதலில் போலீசார். என்ன ஆனது அவருக்கு?

0
547
- Advertisement -

பிரபல நடிகை ஜெயப்பிரதாவை போலீசார் தீவிரமாக தேடி வரும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் இந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஜெயப்ரிதா. 80ஸ் காலகட்டங்களில் தமிழின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஜெயப்பிரதா.

-விளம்பரம்-

இவர் தமிழில் மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் போன்ற வெற்றிப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிப் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

- Advertisement -

ஜெயப்பிரதா திரைப்பயணம்:

அதோடு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரம் ஆகவே மாறி வாழ்ந்து சிறப்பாக நடித்துக் கொடுக்கும் திறமை கொண்டவர் ஜெயப்பிரதா. இவர் தென்னிந்திய சினிமாவில் உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட இவர் எட்டு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு காலத்தில் சினிமாவுலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார் என்றே சொல்லலாம்.

அரசியலில் ஜெயப்பிரதா:

பின் வாய்ப்புகள் குறைவுடன் இவர் அரசியலில் கால் பதித்தார். பின் இவர் ராஜ்யசபா உறுப்பினராகவும் பணியாற்றி இருந்தார். அதன் பிறகு உத்திரபிரதேசத்தின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். அதனை தொடர்ந்து ராம்பூர் மக்களவை உறுப்பினராகவும் ஜெயப்பிரதா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலுக்கு முன்பாகவே இவர் பாஜகவில் இணைந்தார்.

-விளம்பரம்-

ஜெயப்பிரதா மீது வழக்கு:

பின் உத்திரபிரதேசத்தில் உள்ள ராம்பூர் மக்களவையில் போட்டியிட்டு இவர் தோல்வியும் பெற்றார். ஆனால், 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் முன் விதி மீறல் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஜெயப்பிரதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் இந்த வழக்கில் ஜெயப்பிரதா ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஜெயப்பிரதா ஆஜராகவே இல்லை.

தலைமறைவான ஜெயப்பிரதா:

இந்த நிலையில் ஜெயப்பிரதாவுக்கு ஜாமினில் வெளியே வர முடியாத அளவுக்கு பிடிவாதம் போடப்பட்டிருக்கிறது. ஆகையால், ஜனவரி பத்தாம் தேதிக்குள் ஜெயப்பிரதாவை ஆஜர் படுத்துமாறு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவு போட்டு இருக்கிறது. இதனால் ஜெயப்பிரதா தலைமறைவாகியிருக்கிறார். அவரை தற்போது போலீசார் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement