இந்த நடிகையை உங்களுக்கு நினைவிருக்கிறதா 90ஸ் கிட்ஸ்களின் அப்பாக்கள் காலத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை. இவருடைய பெயர் ஜீவிதா. தமிழில் 1984ஆம் ஆண்டு டி. ஆர் இயக்கத்தில் வெளியான “உறவுகாத்தக் கிளி ” என்ற படத்தின் மூலம் அறிவுமாகமானார்.
80 ஹீரோக்களான விஜயகாந்த, ராமராஜன், அர்ஜுன் போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 1986 ஆம் ஆண்டு கவுண்டமணி கதாநாயகனாக நடித்த”பிறந்தேன் வளர்ந்தேன் ” என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் இவர்களுக்கு இரு மகள்களும் பிறந்துள்ளது. தற்போது அதில் மூத்த மகள் ஷிவானிக்கு 22 வயதும், இளையமகளான ஷிவாத்மிகாவிற்கு 18 வயதும் ஆகிறது.சமீபத்தில் நடிகை ஜீவிதாவின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தனது இரண்டு அழகான மகளுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஜீவிதா. தற்போது அந்த புகைப்படம் ப்ரெத்யேகமாக உங்களுக்கா இதோ.
இவரது மூத்த மகள் ஷிவாணிக்கு பல்வேறு தயாரிப்பாளர்களிடம் இருந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வருகிறதாம். அதனால் அவர் விரைவில் தெலுங்கில் கதாநாயகியாக மாறும் வாய்ப்பும் உள்ளது என்று தெரியவந்துள்ளது.