இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படம் கடைக்குட்டி சிங்கம். இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா தயாரித்திருந்தார். இந்த படத்தில் கார்த்திக், சாயிஷா, அர்த்தனா பினு, சத்யராஜ், பிரியா பவானி சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இது குடும்ப மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட கதை. இந்த படம் வெளியாகிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜீவிதா. கடை குட்டி சிங்கம் படத்தின் மூலம் இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்டது. இவர் பல வருடங்களாக சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் மிரள வைக்கக் கூடியவர். மனதில் உறுதி வேண்டும் என்ற தொடர் மூலமாகத்தான் இவர் நடிகையாக அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சினிமா சீரியல் என இரண்டிலுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் பேட்டி எடுக்கப்பட்ட போது கூறியிருப்பது, சினிமாவும் சீரியலும் இந்த இரண்டு விஷயம் தான் பிரதானம். ஒன்று அட்ஜஸ்ட்மெண்ட், இன்னொன்று அரசியல். இந்த இரண்டையும் கடந்து ஒரு நல்ல ப்ராஜெக்டில் நாம் நடிப்பது மிகப் பெரிய சாதனை.
ஜீவிதா அளித்த பேட்டி:
பாசிட்டிவ், நெகட்டிவ் ரோல், போலீஸ் அதிகாரி என பல கெட்டப்புகளில் என்னுடைய திறமையை காட்டி இருக்கிறேன். எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால், நான் நடிக்கவில்லை. காரணம் நேரடியாக மேனேஜர் அட்ஜஸ்ட் பண்ண சொல்லி கேட்பார். அவங்க சொல்ற ஆட்களை எல்லாம் அனுசரித்துப் போனால் நல்ல கதாபாத்திரம், நல்ல சம்பளத்தில் நடிக்கலாம் என்று சொல்வார்கள். எல்லா ஆர்டிஸ்ட்க்கும் இது தான் நடக்குதுன்னு சொல்ல மாட்டேன். சில இடங்களில் இந்த மாதிரி பிரச்சனை இருக்கிறது. சிலர் நேரடியாக அட்ஜஸ்ட் பண்ண சொல்லி கேட்பார்கள். நான் முகத்துக்கு நேராக முடியாது என்று சொல்லி விடுவேன். அப்படியே பல வாய்ப்புகள் இழந்து விட்டேன்.
அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி ஜீவிதா சொன்னது:
அவர்களுக்கு யார் தேவையோ அவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் சினிமாவிலும் சீரியலிலும் இதைத்தான் நான் நிறைய சந்தித்து இருக்கிறேன். நான் உண்மையாக இருக்கிறேன். என்னுடைய வேலையை சரியாக செய்கிறேன். எந்த கேரக்டரிலும் நடிக்க வேண்டுமானாலும் உயிரைக்கொடுத்து நடிக்கிறேன். என்னை திமிர் பிடித்தவள் என்று சொல்லியும் சிலர் வாய்ப்பு கொடுப்பது இல்லை. தமிழ் சீரியல் பார்ப்பது தமிழ் மக்கள். ஆனால், நடிப்பதற்கு மட்டும் வெளியூர் ஆட்களை ஏன் கூட்டிக் கொண்டு வருகிறார்கள்? என்று தெரியவில்லை. தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ் பேசுற ஆர்ட்டிஸ்டிக் என்ன மரியாதை கொடுக்கிறார்கள்?
சீரியல் குறித்து ஜீவிதா சொன்னது:
இது எனக்காக மட்டும் பேசவில்லை என்னை மாதிரி பல திறமையான தமிழ் நடிகர்கள் வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அதை கூடவே நான் பார்த்துகிறேன். யாரோ ஒருத்தரை எங்கிருந்தோ கூட்டிட்டு வந்து அவர்களை வளர்த்து விட்டு பேமஸ் ஆகி விடுவதற்கு இங்கேயும் வாய்ப்புக்காக காத்திருக்கிறவர்களுக்கு கொடுப்பதற்கு ஏன் தயங்குகிறார்கள்? நான் ஒருத்தி கேட்டால் நிச்சயமாக எதுவும் மாறப் போகிறது இல்லை என்று எனக்கு நன்றாக தெரியும். 30 ஆயிரம் சம்பளம் கொடுக்க வேண்டிய இடத்தில் 15,000 தான் கொடுக்கிறார்கள். ஆனாலும், என்ன பண்ணுவது நம்முடைய சூழலுக்கு ஏற்ப போய் நடித்துக்கொண்டு வந்து தான் இருக்கேன். எல்லா சீரியல் மேனேஜர், இயக்குனரையும், மேலிடத்தில் இருப்பவர்களையும் நான் தப்பு சொல்லவில்லை.
மீடியாவில் ஜீவிதா சந்தித்த பிரச்சனைகள்:
ஆனால், பெரும்பாலான இடங்களில் இதுதான் வெளிப்படையாக நடக்கிறது. சன் டிவியில் திருமகள் சீரியலில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு ஆறு மாசமாக வாய்ப்பு வரவில்லை. ஒவ்வொரு படத்துக்கும் நடிக்கும் போது இந்த படம் மூலமாக அடுத்த வாய்ப்பு கிடைக்குமா? இந்த படத்தில் கொடுத்த சம்பளம் வாடகைக்கு ஆகுமா? என்ற மனநிலையில் தான் என் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. புருஷன், ஃபேமிலி, மீடியா என எந்த சப்போர்ட்டும் எனக்கு கிடையாது. இதுவரை இந்தப் பொண்ணை நான் தான் வளர்த்து விட்டேன் என்று ஒருத்தரும் சொல்ல முடியாது. என்னுடைய சொந்த உழைப்பில் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறேன். சீரியலில் நடித்து இருக்கிறேன். மேலும், அட்ஜஸ்ட்மென்ட் ப்ரச்சனை டீன்ஏஜ் பெண்களுக்கு மட்டும் இல்லை. எந்த வயசு இருந்தாலும் அவங்க எதிர்பார்ப்பு இது ஒன்றாகத்தான் இருக்கு.
ஜீவிதா நடிக்கும் படங்கள்:
இதையெல்லாம் தாண்டி இந்த மாதிரியான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எனக்கு வாய்ப்பளித்த, வாய்ப்பளிக்கும் இயக்குனருக்கு என் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் ரொம்ப தைரியமான பொண்ணு. அதனால் தான் என்னால் இவர்களை சமாளிக்க முடிகிறது. என்னிடத்தில் வேறு யாராவது இருந்தால் நிச்சயம் அவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பார்கள். இந்தத் துறையையே வேண்டாம் என்று முடிவெடுத்து இருப்பார்கள். தற்போது நான் யானை, காரி, கொடை போன்ற பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன். அந்த படங்களில் பெரிய அளவில் என் கதாபாத்திரம் இல்லை என்றாலும் அதன் மூலமாக அடுத்த வாய்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். சமீபத்தில் வெளியான மாறன் படத்தில் கூட சின்ன வயது தனுஷிற்கு அம்மாவாக நடித்து இருந்தேன். நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளையும் கடந்து கொண்டிருக்கிறேன். வாய்ப்புகள் அமையும் என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன் என்று கூறியிருந்தார்.