தென்னிந்திய சினிமாவின் நிலை குறித்து நடிகை ஜோதிகா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவர் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்தார். அதன் பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்புகள் வந்தாலும் பல போராட்டங்களுக்கு பிறகு இருவருமே திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டார். பின் இவர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
ஜோதிகா திரைப்பயணம்:
திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிகை என்பதை தாண்டி தயாரிப்பாளரும் ஆவார். சூர்யா- ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை இவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பின் ஜோதிகா பாலிவுட்டிலும் கால் தடம் பதித்திருக்கிறார்.
ஜோதிகா நடித்த படங்கள்:
அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த சைத்தான் படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் வெளியாகி இருந்த ஸ்ரீகாந்த் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதை அடுத்து தற்போது இவர் தமிழில் லயன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவர் டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இதில் ஷபானா ஆஸ்மி, அஞ்சலி ஆனந்த் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் நெட்பிளிக்சில் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
ஜோதிகா பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜோதிகா சொன்னது, நான் நடிக்க ஆரம்பித்து 10 ஆண்டுகளிலேயே அனைத்து தென்னிந்திய நடிகர்களுடனும் நடித்து விட்டேன். என்னுடைய 28 வயதிற்கு பிறகு தான் நான் சில படங்களுக்கு மட்டும் ஓகே சொல்லி நடித்த்தேன். அதுவும் ரொம்ப கவனமாக முடிவெடுத்தேன். தென்னிந்திய சினிமாவில் இருந்து தான் நான் வருகிறேன். அங்கு ஆண்களை முன்னிலையாகக் கொண்ட படங்கள் தான் அதிகமாக வருகிறது. இப்போது மாற்றங்கள் வந்திருக்கின்றது. பாலிவுட்டிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
தென்னிந்தியா சினிமா குறித்து சொன்னது:
தென்னிந்தியாவில் பெரும்பாலுமே ஆண்களுக்காக தான் அதிக படங்கள் எழுதப்பட்டிருக்கிறது. அதில் பெண்கள் கதாபாத்திரம் முழுமை அடைந்ததாக கூட இருக்காது. அதில் பெண்கள் நடனம் ஆடவும், ஆண்களை புகழவும் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். அது எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், நான் வேறு பாதையைத் தேடிக் கொண்டேன். அந்த மாதிரியான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் நிறைய படங்களுக்கு நோ சொல்லிவிட்டேன். நான் என்னுடைய பாதையை கவனமாக தேர்ந்தெடுத்தேன். அதுதான் என்னை இப்போது இருக்கும் பாதையில் இயக்கிக் கொண்டிருக்கின்றது என்று கூறியிருக்கிறார்