நாச்சியார் படத்தால் உச்சக்கட்ட சோகத்தில் இருக்கும் ஜோதிகா ! காரணம் இதுதான்

0
9218
Jyothika nachiyaar
- Advertisement -

இப்போது வேண்டுமென்றால் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கலாம் ஆனால் ஒரு 10 வருடம் பின்னோக்கி பார்த்தால் நடிகை ஜோதிகா தான் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வந்தார்.

Jyothika

நடிகை ஜோதிகாவை பெண் சிவாஜி என்று கூட அழைக்கலாம், அந்த அளவிற்கு அவர் நடிப்பில் கை தேர்ந்தவராக இருந்துவந்தார். குறிப்பாக சொல்லப்போனால் இவர் நடித்த சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி படத்தில் இவர் நடிப்பைக்கண்டு பலரும் வியந்துள்ளனர்.இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் என்றே கூறலாம்.

- Advertisement -

நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு ஜோதிகா படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார் .பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்க மீண்டும் படங்களில் நடிக்கத்துவங்கினார்.36 வயதினிலே என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா மேலும் ரசிகர்ளின் மத்தியில் அந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதன் பின்னர் கடந்த ஆண்டு வெளிவந்த மகளிர் மட்டும் என்ற படம் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் சென்ற மாதம் பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் படத்தில் போலீசாக நடித்தார் ஜோதிகா டீசரிலேயே அந்த படத்தின் வெற்றி உறுதியான போதும் படம் வெளிவந்த பிறகு நல்ல விமர்சங்களை பெற்றது.மேலும் ஜோதிகாகிவின் நாச்சியார் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

naachiyar

ஆனால் இந்த படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு இந்த படம் எதிர்ப்பார்த்த லாபத்தை பெற்றுத் தரவில்லையம் இதனால் படத்தில் நல்ல பெயரை வாங்கியும் படம் நஸ்டமடைந்துள்ள என்ற விஷயத்தை அறிந்த ஜோதிகா சற்று வருத்தத்தில் உள்ளாராம்.

Advertisement