போலீஸ் எச்சரித்தும் அதை மீறி காஜல் அகர்வால் வெளியிட்ட வீடியோ.!

0
120
Kajal-Agarwal
- Advertisement -

கடந்த சில வாரங்களாக ‘கிகி’ சவால் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த சவாலில், ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து பலரும் வெளியிட்டு வருகின்றனர். ஆபத்தான இந்த சவாலை செய்யும் நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கபடும் என்று காவல் துறையும் எச்சரித்திருக்கிறது.

இருப்பினும் இந்த சவாலை பல்வேறு நடிகைகளும் செய்து தங்களது வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இந்த சவாலை நடிகை காஜல் அகர்வால் இந்த சவாலை வித்யாசமாக செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் தற்போது தெலுங்கு நடிகர் பெல்லாம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடித்து வரும் அவரது 5வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகை காஜல். அதில் தலையில் பிளாஸ்டருடன் ஒரு வீல்சேரில் நகர்ந்து வந்த கஜால் மற்றும் பெல்லாம்கொண்டா ஸ்ரீனிவாஸ் திடீரென்று எழுந்து கிகி சவால் பாடலுக்கு நடனமாடுகின்றனர். பின்னர் ஆபத்தான இந்த கிகி சவாலை யாராவது செய்தால் எங்களை போல தான் இப்படி அடிபட்டு வீல்சேரில் போக வேண்டும் என்று அறிவுறுத்துள்ளனர்.

இந்த விடியோவை , கஜால் மற்றும் பெல்லாம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடித்து வரும் புதிய படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என்று அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார் காஜல். பல நடிகைகள் விளம்பரத்திற்காக செய்து வரும் இந்த கிகி சவாலை நடிகை காஜல் அகர்வால் சமூக அக்கறையுடன் செய்துள்ள இந்த விழிப்புணர்வு வீடியோ ரசிகர்ககளை மிகவும் கவர்ந்துள்ளார்.

Advertisement