ஹிந்தி சினிமாவில் அறம் குறைவாக இருக்கிறது என்று காஜல் அகர்வால் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் இருந்தவர் காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின் 2007 ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா சினிமா துறைக்கு காஜல் வந்தார்.
அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து இருக்கிறார்.
காஜலின் திருமணம் :
பின் காஜல் அகர்வால் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இது குறித்து சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. பின் 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணம் கொரோனா லாக் டவுனில் நடந்ததால் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. அதோடு திருமணத்திற்கு பின்னும் காஜல் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
காஜல் நடித்த படங்கள்:
வெங்கட் பிரபு இயக்கிய ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடரில் காஜல் நடித்தார். சினாமிகா என்ற படத்தில் நடித்தார். காஜல் அகர்வால் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த கருங்காப்பியம், உம்மா உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெளியாக இருக்கிறது.
காஜல் அளித்த பேட்டி:
சமீபத்தில் தான் இவர் நடித்த கோஸ்ட் படம் வெளியாகி இருந்தது. இப்படி இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் காஜல் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவரிடம் தென்னிந்திய சினிமாவுக்கு நடிக்க வந்தது ஏன்? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு காஜல், இந்தி என்னுடைய தாய்மொழி. நான் இந்தி திரைப்படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். ஆனால், தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு எல்லாம் இந்தி திரை உலகில் குறைவாக தான் இருக்கிறது என்று கருதுகிறேன்.
Bold statement by Kajal Aggarwal. pic.twitter.com/1cDvtAMtX4
— Films and Stuffs (@filmsandstuffs) March 30, 2023
சினிமா குறித்து சொன்னது:
அதனால் இந்தியை விட்டு விட்டு தென்இந்திய சினிமாவில் நடிக்க விரும்பினேன். பலபேர் தங்களுடைய திரை வாழ்க்கையை ஹிந்தியில் இருந்து தொடங்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஏனென்றால், நாடு தழுவி அங்கீகாரம் அங்கு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். தென்னிந்திய சினிமா அனைவரையும் ஏற்றுக் கொள்ளக் கூடியது. இங்கு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் தனித்துவமான திரைப்படங்கள் வருகின்றது. சிறந்த கதாபாத்திரங்களும், கதைகளும் இருக்கின்றது. ஆனால், கடின உழைப்புக்கு குறுக்கு வழியும் வெற்றிக்கு எளிதான வழியும் எதுவும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.