தன் சிறு வயதிலேயே தற்கொலை செய்து கொண்ட அம்மா, அவரது டைரியில் இருந்துள்ள விஷயம் – கல்யாணியின் உருக்கமான பதிவு.

0
728
kalyani
- Advertisement -

தன் தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து நடிகை கல்யாணி பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ மறக்க முடியாத குழந்தை நட்சத்திரங்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை கல்யாணியும் ஒருவர். இவருடைய உண்மையான பெயர் பூர்ணிதா. தமிழில் இவர் அள்ளித்தந்த வானம் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதன் பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கல்யாணி நடித்திருந்தார். மேலும், நடிகர் ஜெயம் ரவி அறிமுகமான “ஜெயம்” படத்தில் நடிகை சதாவிற்கு தங்கையாக கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பூர்ணிதா.

-விளம்பரம்-
Kalyani

அந்த கதாபாத்திரம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானதால் இவரது பூர்ணிதா என்ற பெயரை மறந்து கல்யாணி என்றே எல்லோரும் அழைக்கபட்டார்கள். மேலும், இவர் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டும் இல்லாமல் பீச் கேர்ள்ஸ், ஜூனியர் சீனியர், சூப்பர் மாம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த போதே சீரியலில் கல்யாணி நடித்துக்கொண்டிருந்தார். பின்னர் இவர் சின்னத்திரையில் செட்டில் ஆகி விட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு கல்யாணி சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார்.

- Advertisement -

கல்யாணி மீடியாவில் விலகிய காரணம்:

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறுகையில், அட்ஜெஸ்ட்மென்ட் செய்துகொள்ள கேட்டதால் தான் இந்த துறையில் இருந்தே விலகியதாக கூறி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. திருமணத்திற்கு பின்னர் பல வாய்ப்புகள் வந்தும் அதனை நிராகரித்துவிட்டார் கல்யாணி. பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் மெண்டராக பங்கேற்று இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய அம்மாவின் தற்கொலை பற்றி உருக்கமான பதிவு ஒன்றை கல்யாணி பதிவிட்டிருக்கிறார்.

கல்யாணி பதிவிட்ட பதிவு:

அதில் அவர் கூறியிருப்பது, 24 டிசம்பர் 2014. நான் இரண்டு ஆன்மாக்களை இழந்த நாள். ஒரு சாதாரண நாளாக ஆரம்பித்தது என் வாழ்வின் மிக கொடூரமான நாளாக மாறியது. என் அம்மாவின் பக்கத்து வீட்டில் தான் நான் வசித்து வந்தேன். வழக்கம்போல் அவருடன் ஜிம்மிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன். வீட்டு வாசலில் அழைப்பு மணியை அடித்ததும் அவர் சுறுசுறுப்பாக தெரியவில்லை. ஏதோ ஒன்றை இழந்ததைப் போல உணர்ந்தார். நான் அவரை தயாராக சொல்லி சிறிது எலுமிச்சைசாறு கொடுத்தேன். பின் நானும் தயாராக சென்று விட்டேன். 20 நிமிடங்கள் கழித்து அம்மாவை அழைத்து செல்ல சென்றேன்.

-விளம்பரம்-

தாய் தற்கொலை குறித்து கல்யாணி சொன்னது:

பலமுறை அழைப்பு மணியை அடித்தேன். இப்போது என்னுடைய மிகவும் மோசமாக என்னைத் தாக்கியது. ஏதோ சரியாக உணரவில்லை. நான் கதவை உடைத்து திறந்து நான் உள்ளே ஓடினேன். என் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டேன். எனக்கு அப்போது 23 வயது. என் வாழ்க்கை மாறிவிட்டது. என் அம்மா எனது சிறந்த தோழி. அவர் இல்லாத உலகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. என் ஆன்மாவும் இறந்துவிட்டதாக உணர்ந்தேன். என் தாயின் டைரி அவர் நீண்ட காலமாக சோகமாக இருந்ததை வெளிப்படுத்தியது. அவர் எங்கள் யாரிடமாவது சொல்லி இருக்கலாம்.

ஹெல்ப்லைன் குறித்து கல்யாணி சொன்னது:

தொலைந்து போய், நம்பிக்கை இழந்து, நானும் என் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றேன். உள்ளூர் ஹெல்ப்லைன்களில் உதவியை நாட முயற்சித்தேன். ஆனால், யாரும் எடுக்கவில்லை. என் கணவர் எனக்கு உதவினார். நான் நன்றாக இருக்கிறேன். உதவியை பெற முயல்பவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால், ஹெல்ப்லைன் யாரும் பதில் அளிக்காததால் அதை பெற முடியவில்லை. நான் அதை மாற்ற விரும்புகிறேன். உதவி கிடைக்காததால் யாரும் தாயை இழக்க கூடாது. இதை மாற்றுவதற்கான முதல் படி தேசிய தற்கொலை தடுப்பு பற்றி அனைவரும் அறிந்து இருப்பதை உறுதிசெய்வது என்று கூறி இருக்கிறார்.

Advertisement