அட்ஜஸ்ட் செய்ய சொன்னவர்கள் பெயரை வெளியிட தயக்கமல்லை. ஆனால் – Metoo குறித்து நடிகை கல்யாணி

0
1284
kalyani
- Advertisement -

அள்ளித்தந்த வானம் படத்திற்கு பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் குருவம்மா. ரமணா. ஜெயம் போன்ற பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் கல்யாணி. திரைப்படங்களில் நடித்ததோடு பீச் கேர்ள்ஸ், ஜூனியர் சீனியர், சூப்பர் மாம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார் கல்யாணி.

-விளம்பரம்-
Kalyani

சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட கல்யாணி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசிய இருந்தார். அதில் ஒரு பெரிய ஹீரோ ,பெரிய தயாரிப்பாளர் போன்றவர்களின் படங்கள் தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால், அவர்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ள சொன்னதால் அந்த பட வாய்ப்பை நிராகரித்ததோடு இனி படங்களில் நடிக்கவே கூடாது என்று முடிவு செய்து விட்டதாகவும் கூறி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமாக பேட்டி அளித்த கல்யாணி, சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு நோ சொல்லிவிட்டு டிவி பக்கம் போனேன் அங்கு ஒருத்தன் சீண்டினேன். போங்கடா என்று இரண்டுக்குமே டாட்டா காட்டிவிட்டு வெளிநாட்டிற்கு வந்து விட்டேன். நான் ஹீரோயினியாக நடித்தபோது சூட்டிங்கில் ஒரு ஆங்கிளில் படம் எடுத்துவிட்டு வெளியானபோது அதை பார்த்த போது வேறு மாதிரி காட்டி இருந்தார்கள். அப்போது தான் சினிமாவில் இப்படி எல்லாம் இருக்குமா என்று நினைத்தேன். அதன் பின்னர் பெரிய பட வாய்ப்புகள் இருக்கும் ஆனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என்று சொன்னதும் அதற்கு முடியாது என்று சொல்லிவிட்டு டிவி பக்கம் போனேன்.

Kalyani

அங்கேயும் அதே அட்ஜஸ்ட்மெண்ட் ஆசாமிகள் தான் இருந்தார்கள் பின்னர் இரண்டிற்கும் முழுக்கு போட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டு கணவருடன் வெளிநாட்டிற்கு கிளம்பி விட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படி கேட்டவர்கள் பெயரை சொல்ல தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அவர்களுக்கு குடும்பம் மனைவி குழந்தை இருக்கிறது அவர்கள் என்ன தவறு செய்தார்கள் அவர்களின் வாழ்க்கையில் இது பாதிக்கும் என்பதால் தான் பெயரை வெளியிட வேண்டாம் என்று உறுதி செய்தேன். இருப்பினும் இந்த பேட்டியை அவர்கள் நிச்சயம் பார்ப்பார்கள் கண்டிப்பாக அவர்களுக்கு உறுத்தும் அதுவே எனக்கு போதும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement