அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமையால் மீடியாவை விட்டு விலகிய கல்யாணி – இப்போ எப்படி இருக்கார், அவருக்கு இவ்ளோ பெரிய மகளா ?

0
555
kalyani
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான நபராக இருந்து வந்துள்ளனர். அதுவும் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டும் தான் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் நடிகை கல்யாணியும் ஒருவர். இவரது இயற்பெயர் பூர்ணிதா. ஆனால், கலைத் துறைக்காக தனது பெயரை கல்யாண என்று மாற்றிக் கொண்டார். 1990ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த இவர் தனது 16 வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். பிரபுதேவா நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான அள்ளித்தந்த வானம் படத்தில் ஜூலி என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கல்யாணி.

-விளம்பரம்-

அள்ளித்தந்த வானம் படத்திற்கு பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் குருவம்மா. ரமணா. ஜெயம் போன்ற பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் கல்யாணி. திரைப்படங்களில் நடித்ததோடு பீச் கேர்ள்ஸ், ஜூனியர் சீனியர், சூப்பர் மாம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார் கல்யாணி.

- Advertisement -

இறுதியாக தமிழில் வெளியான இளம்புயல் என்ற படத்தில் நடித்தார் கல்யாணி அதன் பின்னர் இவரை சினிமாவில் காண முடியவில்லை. ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற கல்யாணி, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்தும், சினிமாவில் ஏன் நடிப்பதை நிறுத்தினேன் என்றும் கூறி இருந்தார். நான் சினிமாவில் கதாநாயகியாக நடித்த தொடங்கிய போது பலரும் என் அம்மாவிடம் பேசுவார்கள்.

அவருக்கு தமிழ் தெரியாது அவர்கள் பேசும்போது ஒரு பெரிய ஹீரோ ,பெரிய தயாரிப்பாளர் போன்றவர்களின் படங்கள் தனக்கு வாய்ப்பு வந்து இருப்பதாக கூறியவுடன் என் அம்மா மிகவும் சந்தோஷத்தில் அந்த வாய்ப்புகளுக்கு சரி என்று கூறி விடுவார்.ஆனால், அதன் பின்னர் நான் சினிமாவில் ஒரு சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று என் அம்மாவிடம் கூறினார்கள். ஆரம்பத்தில் அது ஏதாவது கால்ஷீட் அட்ஜெஸ்ட் மெண்ட்டாக இருக்கும் என்று என் அம்மா நினைத்தார்.

-விளம்பரம்-

ஆனால் அதன் பின்னர் அவர்களுக்கு தவறாக பட போனை துண்டித்து விட்டார் என்று கூறிய கல்யாணி இந்த காரணத்தினால்தான் நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறிய கல்யாணி தொலைக்காட்சியில் கூட தனக்கு இது போன்ற தொல்லைகளில் இருந்து உள்ளதாக கூறி இருந்தார். ஒருமுறை நான் பெங்களூரில் இருந்த போது அந்த இயக்குநர் கால் செய்து இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு பப்பில் சந்திக்கலாம் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுக்கவே அதன் பின்னர் கல்யாணிக்கு மீடியாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு மகளும் பிறந்து இருக்கிறார். அவருக்கு தற்போது 4 வயதாகிறது. சமீபத்தில் கல்யாணி தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வர, இவருக்கு இவ்ளோ பெரிய மகளா என்று ரசிகர்கள் பலர் வியந்து போயுள்ளனர்.

Advertisement