தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை கனகா. இவர் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் முடிந்து 15 நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லை. மேலும், இவருடைய திருமண வாழ்க்கை பற்றி இன்று வரை தெரியவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை கனகா பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகிவந்தது. அந்த வீடியோவில் பேசிய நடிகை கனகா , எனக்கு தற்போது படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது.ஆனால், எனக்கு இப்போது 50 வயது கிட்ட ஆக இருப்பதால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நான் நடிப்பிலிருந்து விலகி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதனால் நான் மிகவும் பழையது. பத்து வருடங்களுக்குள் இருந்தால் மட்டும் தான் புதியது என்று சொல்வார்கள்.
இதையும் பாருங்க : நிச்சயம் முடிந்து ஓராண்டிற்கு பின் சத்தமில்லாமல் திடீர் திருமணம் செய்த நடிகை வித்யுலேகா
நிறைய விஷயங்களை நானே ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இந்த வயதில் உனக்கு நடிக்க தேவையா? என்று சிலரும் கேட்பார்கள். அப்படி என்னை மீண்டும் நடிக்க அழைத்தால் எப்படி பேசவேண்டும், காஸ்ட்யூம், அழகு, எப்படி பழக வேண்டும் என பல விஷயங்களை இன்றைக்கு இருப்பது போல் நான் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறி இருந்தார். கனகாவின் இந்த வீடியோவை பார்த்த சிலர், மீண்டும் சினிமா வாய்ப்பை பிடிக்க விளம்பரம் தேடும் முயற்சியாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்று விமர்சனம் செய்தனர்.
இதுகுறித்து மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்ட கனகா, நான் சினிமாவில் நடிக்க விளம்பரம் தேடி வீடியோ வெளியிடவில்லை. சினிமாவை பற்றி இதுவரை எதுவும் கற்றுக்கொள்ளாமல் இருந்த நான் புதிதாக கற்கலாமா என்று யோசிப்பதாக தான் அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தேன். உடனே பலரும் நான் விளம்பரத்துக்காகவும், சினிமா வாய்ப்புக்காகவும் வீடியோவை வெளியிட்டு இருப்பதாக விமர்சிக்கிறார்கள். உங்களுடன் பேசவே வீடியோ வெளியிட்டேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.