திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான வேலையில் நீச்சல் உடையில் இப்படி ஒரு போஸ்.!

0
16309
kanikha

திருமணம் முடிந்த பின்னர் சினிமாவிற்கு டாடா சொன்ன நடிகைகள் பலர் உள்ளனர். அந்த வகையில் வரலாறு பட நடிகை கனிகாவும் ஒருவராவார். நடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்றும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது.

சிறு வயதில் இருந்து நன்றாக பாடும் திறமை இவரிடம் இருந்தது. இதனால் 2001ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப் போட்டிக்காக இவரை பாட அழைத்திருந்தனர். அதில் என்ன சுவாரஸ்யம் என்றால், அந்த போட்டியில் கடைசி நேரத்தில் ஒரு மாடல் வரவில்லை என ஒதுங்கிவிட்டார்.

- Advertisement -

அழகிப் போட்டியில் பட்டமும் வென்றுவிட்டார் கனிகா. இதன் காரணமாக இவரை நோக்கி பட வாய்ப்புகள் படையெடுக்க துவங்கியது. கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வந்த 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்தார் கனிகா.

தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஆகிய படங்களில் நடித்தார் கனிகா. அதன்பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு தனது 26 வயதில் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு சாய் ரிஷி என்ற மகன் பிறந்தார்.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை குறைத்துக்கொண்ட கனிகா அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் நிலையில் இப்படி ஒரு போஸ் தேவையா என்று கமன்ட் அடித்து வருகின்றனர்.

Advertisement