அம்மான்னா இப்படி தான் இருக்கணும்னு சட்டம் இல்ல – குட்டை ஆடை அணிந்து கனிகா காட்டம்.

0
2977
kanika
- Advertisement -

சினிமாவைப் பொருத்தவரை இளமை எல்லாம் நடிகர்களுக்கு மட்டும் தான் ஆனால் நடிகைகளைப் பொறுத்தவரை 40 வயதைத் நெருங்கினாலே அவர்கள் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுகிறார்கள் ஆனால் 40 வயதை கடந்தும் ஒரு சில நடிகைகள் தற்போதும் இளமையாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் 37 வயதை நிறைவடைந்த நடிகை கனிகாவும் ஒருவர். தமிழில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா.

-விளம்பரம்-

நடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்றும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. சிறு வயதில் இருந்து நன்றாக பாடும் திறமை இவரிடம் இருந்தது. இதனால் 2001ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப் போட்டிக்காக இவரை பாட அழைத்திருந்தனர். அதில் என்ன சுவாரஸ்யம் என்றால், அந்த போட்டியில் கடைசி நேரத்தில் ஒரு மாடல் வரவில்லை என ஒதுங்கிவிட்டார். அழகிப் போட்டியில் பட்டமும் வென்றுவிட்டார் கனிகா.

- Advertisement -

இதன் காரணமாக இவரை நோக்கி பட வாய்ப்புகள் படையெடுக்க துவங்கியது. கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வந்த 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்தார் கனிகா. தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஆகிய படங்களில் நடித்தார் கனிகா. அதன்பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு தனது 26 வயதில் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு சாய் ரிஷி என்ற மகன் பிறந்தார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி மாடர்ன் உடைகளில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஷார்ட்ஸ் மற்றும் பனியன் அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அதற்கு விமர்சனங்கள் எழும் என்று முன்கூட்டியே விளக்கத்தையும் அளித்துள்ளார். அதில், ஆம், நான் ஒரு தாய் தான். அதனால் என்ன ? என் நண்பர்களுடன் வெளியே சூத்ரா ஆசைப்படுகிறேன். என்னுடைய வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். என் மகனை நேசிக்கிறேன். இப்படி தான் பெற்றோர்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் இல்லை. தாய் என்பவளை அவளுடைய தோற்றத்தை வைத்து மட்டும் எடை போடாதீர்கள் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement