எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து நடிகை கனிகா வெளியேறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமாவுலகில் சில நடிகர், நடிகைகள் சில படங்கள் நடித்தாலும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கனிகா. இவர் மதுரையில் 1982 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் திரைத்துறையின் மீது இருந்த ஆர்வத்தினால் கல்லூரி படிக்கும் பொழுது பாட்டு பாடுதல், நாடகம் போன்றவைகளில் நடித்துள்ளார்.

இவர் சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியில்பங்கு பெற்று வெற்றி பெற்றார்.
இதனால் இவர் திரைத்துறைக்கு வர காரணமாக இருந்தது. திரைபயணம் மற்றும் இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால் இவரின் இனிய குரலுக்கு சரியான தமிழ் உச்சரிக்கும் திறமையினால் குரலுக்கு நடிக்க தொடங்கியபோது பின்னணி குரல் கொடுத்து நடித்தார். மேலும், இவர் 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
கனிகா குறித்த தகவல்:
அதனை தொடர்ந்து இவர் எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற படங்களில் நடித்திருந்தார்.
மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிகை மட்டும் இல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்டும் ஆவார். பின் இடையில் இவர் சில காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தார். அதன் பின் இவர் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

எதிர்நீச்சல் சீரியல்:
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

கனிகா விலகல்:
அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். இந்த சீரியலை இயக்குனர் திருசெல்வம் கடந்த 2002 ஆம் ஆண்டு ஒளிபரப்பினார். இந்த சீரியல் முதல் பாகம் நிறைவடைந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் ஆதி குணசேகரனின் மனைவியாக கனிகா நடித்து வந்தார் கனிகா. தற்போது இவர் அடிப்பட்டு ஹாஸ்பிடலில் இருப்பது போல காண்பித்து இருக்கிறார்கள்.

சீரியல் விட்டு விலக காரணம்:
இப்படி இருக்கும் நிலையில் திடீரென நடிகை கனிகா சீரியல் இருந்து விலகி இருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இவர் சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம், சீரியலில் இவருக்கு பெரிதளவு ஸ்கோப் இல்லாததால் தான் விலகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக சீரியலுக்கு நெருக்கமானவர்கள் கூறியிருப்பது, கனிகா அமெரிக்காவில் போய் செட்டில் ஆக முடிவு செய்து இருக்கிறார். அதனால் தான் இவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். சோசியல் மீடியாவில் வரும் செய்திகள் எதுவும் நிஜமில்லை என்று கூறியிருக்கிறார்கள்






