ஒரு 5லட்சம் ரூபாய் கூட குடுக்க முடியாத நிலையிலா ராஜமௌலி இருக்காரு – கடுமையாக விமர்சித்த பழம்பெரும் நடிகை.

0
972
Kanchana
- Advertisement -

பாகுபலி, RRR போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த ராஜமௌலியை விமரிசித்து பேசியுள்ளார் பிரபல நடிகை காஞ்சனா. சினிமாவில் நடித்த நட்சத்திரங்கள் பலர் பல கோவில்களை கட்டி கொடுத்திருக்கின்றனர். உதாரணமாக அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில், ராகவா லாரன்ஸ் கட்டிய ராகவேந்திரா கோவில், யோகிபாபு கட்டிய வாரகி அம்மன் கோவில் என பலர் கோவில்களை காட்டியிருக்கின்றனர். ஆனால் அதனை தாண்டி சுமார் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை திருப்பதி ஏழுமலையானுக்கு தானமாக கொடுத்துள்ளார் பழம்பெரும் நடிகையான காஞ்சனா.

-விளம்பரம்-

இவரது இயற்பெயர் வசுந்தரா தேவி. இவர் தொடக்கத்தில் விமானத்தில் பணிபுரியும் பணிப்பெண்ணாக இருந்து 1964ஆம் ஆண்டு வெளியான காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாக்கினார். இந்த படத்தில் தான் இயக்குனர் ஸ்ரீதர் இவருக்கு காஞ்சனா என்ற பெயரை வைத்தார். ஏனென்றால் அப்போது வசுந்தரா தேவி என்ற பெயரில் நடிகை வைஜயந்தி மாலாவின் தாயும் இதே பெயரில் நடித்து கொண்டிருந்ததால் இந்த காஞ்சனா என்ற பெயர் மாற்றத்துடன் அறிமுகமாகினார் வசுந்தரா தேவி.

- Advertisement -

80 கோடி தானம் :

இவர் நடித்த “காதலிக்க நேரமில்லை” படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் வாய்ப்புகள் குவியத்தொடங்கின. தொடர்ந்து படங்களில் 46 வருடங்கள் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த காஞ்சனா சமீபத்தில் அர்ஜுன் ரெட்டி நடித்த படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தான் இதனை காலம் சம்பாதித்த சுமார் 80கோடி ரூபாய் சொத்துக்களை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எழுதி வைத்துள்ளார் காஞ்சனா.

இவர் கொடுத்துள்ள சொத்துக்களில் தி.நகர், ஜி.என் செட்டி சாலையில் உள்ள 40 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலமும் அடங்கும், அங்குதான் பத்மாவதி கோவிலும் தற்போது கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த சொத்து பல போராட்டங்களுக்கு பிறகு கடவுளின் அருளால் கிடைத்தது. அதனால் தான் இந்த சொத்தை மக்களுக்கு கொடுத்து விட்டேன் என்று தெரிவித்திருந்தார் காஞ்சனா. மேலும் நடிகை காஞ்சனா சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர் ராஜமௌலியை விமர்சித்து பேசியுள்ளார்.

-விளம்பரம்-

காஞ்சனா பேட்டி :

அதாவது “ராஜமவுலியின் சிறந்த படங்களில் ஒன்றான “பாகுபலி” படத்தில் காஞ்சனா நடிக்க இயக்குனர் ராஜமவுலி அணுகியிருக்கிறார். படத்தில் இரண்டு நாட்கள் நடிக்க கால்ஷீட்டும் கேட்டிருக்கிறார் ராஜமௌலி. இந்த நிலையில் நடிகை காஞ்சனா பாகுபலி படத்தில் நடிக்க 5 லட்சம் சம்பளமாக கேட்டிருக்கிறார். ஆனால் இயக்குனர் ராஜமௌலி அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என தவிர்த்து விட்டாராம்.

5 லட்சம் ரூபாய் பெரியதா:

மேலும் நேர்காணலில் பேசிய காஞ்சனா “ஒரு பழம்பெரும் நடிகைக்கு 5லட்சம் ரூபாய் கூட குடுக்க முடியாத நிலையில் ராஜமௌலி இருக்கிறாரா? 5 லட்சம் ரூபாய் என்பது அவருக்கு பெரிய தொகையா?. என்னை போன்ற நடிகைக்கு அவர் அந்த தொகையை கொடுத்தால் எத்தனை பேருக்கு உபயோகமான இருந்திருக்கும் என்று விமரிசித்துள்ளார். இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் 80 கோடியை தானமாக கொடுத்த ஒருவருக்கு 5 லட்சம் பெரிய விஷயமா என்று ராஜமௌலியை விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement