ஜெயலலிதா இறப்பிற்கு ஒரு நாள் முன்பே RIP போட்டு delete செய்துள்ள பிக் பாஸ் பிரபலம். அவரே வெளியிட்ட பதிவு.

0
635
Jaya
- Advertisement -

ஜெயலலிதா இறப்பு குறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. புரட்சித்தலைவியாகவும், தமிழக மக்களின் அம்மாவாகவும் இருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இவர் ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். பின் இவர் எம்ஜிஆர் மீது இருந்த பற்றின் காரணமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு புரட்சித்தலைவி, அம்மா என்று இவருக்கு மக்கள் ஆதரவளித்தார்கள். மேலும், இவர் அரசியலில் நுழைவதற்கு முன் 120க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்திருக்கிறார். ஆனால், இவர் அரசியலில் நுழைந்த உடன் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி விட்டார். மேலும், ஜெயலலிதா அவர்கள் அதிமுக கட்சியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 1991ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக ஆனார். அதனை தொடர்ந்து இவர் ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக வகித்திருக்கிறார்.

- Advertisement -

ஆறுமுகசாமி வெளியிட்ட அறிக்கை:

இவர் இறக்கும் போது கூட தமிழக்தின் முதல்வராக இருந்து தான் இறந்தார். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அவர் 608 பக்க விசாரணை அறிக்கையை முதல்வர் மு க ஸ்டாலினிடம் ஒப்படைத்திருக்கிறார். இதை இன்று சட்டப்பேரவையில் தாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதில், ஜெயலலிதாவிற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை அப்பல்லோ வந்தும் ஜெயலலிதாவுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை.

ஜெயலலிதா இறப்பு :

மருத்துவர்கள் பரிந்துரைப்படி ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை தராதது ஏன் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. மேலும், ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தன்னுடைய அதிகாரப்பூர் அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கு ஒரு நாள் முன்பாகவே டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3:30 முதல் 3.50 மணியளவில் ஜெயலலிதா இறந்திருக்கலாம் என்ற சாட்சிகளின் அடிப்படையில் ஆறுமுகசாமி அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

ஜெயலலிதா இறப்பு குறித்த சாட்சியங்கள்:

அதுமட்டுமில்லாமல் இதற்கு ஆதாரமாக ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு அவருடைய சகோதரர் மகன் தீபக் டிசம்பர் 4 ஆம் தேதி 3 50 மணிக்கு திதி கொடுத்து இருக்கிறார். அதோடு டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு முன்பே மறைந்த முதலமைச்சருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது. இதயத்தில் மின்சார செயல்பாடு எதுவும் இல்லை மற்றும் இரத்த ஓட்டம் இல்லை என்பதே அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்தவர்களின் தெளிவான சாட்சியங்களாக இருக்கிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கஸ்தூரி பதிவு:

இந்த நிலையில் இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி அவர்கள் 2016 ஆம் ஆண்டில் டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதா இறந்து விட்டதாக தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவை ஒன்று போட்டிருந்தார். அப்போது ஃபேஸ்புக்கில் எதிர்ப்பு பெற்ற பதிவை தற்போது கஸ்தூரி ஷேர் செய்து இருக்கிறார். அதில் அவர், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எதிர்ப்புகள் வலுத்ததால் அந்த ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டேன். ஆனால், facebook பதிவு அப்படியே இருக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement