நயன்தாரா ஒரு போராளி – திடீரென்று புகழ்ந்து தள்ளிய காத்ரீனா கைப். காரணம் இது தான்.

0
1541
nayan
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். சில வருடங்களாகவே நடிகை நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். எத்தனையோ புதிய கதாநாயகிகள் வந்தும் அவரை அசைக்க முடியவில்லை.

-விளம்பரம்-

இந்த நிலையில் நடிகை நயன்தாராவை போராளியாக பார்ப்பதாக பாலிவுட் நடிகை கத்ரினா கைப் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகை கத்ரினா கைப். இவர் அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கான விளம்பர படத்தில் நடிக்க நயன்தாராவை அழைத்து உள்ளார். பின் நயன்தாராவை நடிக்க வைத்தார். இதில் நடித்ததற்காக கத்ரினா கைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

மேலும், நயன்தாராவுடன் பழகிய அனுபவம் குறித்து கத்ரினா கைப் சமீபத்தில் பேட்டியில் கூறி உள்ளார். அதில் அவர் கூறியது, நயன்தாரா விளம்பர படத்தில் நடித்தபோது பல விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் மிகவும் அற்புதமானவர். அதுமட்டும் இல்லாமல் நயன்தாரா ஒரு போராளி. தன்னுடைய கடுமையான உழைப்பால் இளம் வயதில் இருந்தே சினிமா துறையில் இருக்கிறார்.

நயன்தாராவின் குணத்தோடு எனது குணங்களும் ஒத்துப்போகிறது. படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்ட போது எனது குழுவினரிடம் நான் நயன்தாராவை பார்க்கும் போது என்னை கண்ணாடியில் பார்ப்பது போல் உள்ளது என்று சொன்னேன் என்று கத்ரினா கைப் கூறினார். இப்படி இவர் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement