மும்பை To மதுரை விசிட், அம்மாவின் ஆசை – பள்ளியில் அரபிக் குத்து ஆடிய கத்ரீனா கைஃப் – பின்னணி என்ன தெரியுமா ?

0
370
katrina kaif
- Advertisement -

பள்ளியின் தொடக்க விழாவிற்காக மும்பையில் இருந்து மதுரைக்கு கத்ரீனா கைஃப் வந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் கத்ரீனா கைஃப். இவர் ஹிந்தி மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கு பாலிவுட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். கத்ரீனா ஹாங்காங்கில் பிறந்தவர். அவருடைய தாயார் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர். அவருடைய தந்தை காஷ்மீரை சேர்ந்தவர். மாடலாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் கத்ரீனா.

-விளம்பரம்-

பின் இவர் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும், 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பூம் என்ற படத்தின் மூலம் தான் கத்ரீனா நடிகையாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் இந்தியில் பல படங்களில் நடித்திருந்தார். இதனிடையே கத்ரீனா கைப், நடிகர் விக்கி கவுசாலும் நீண்டகாலமாக காதலித்து வந்திருக்கிறார்கள். பின் அனைவரும் எதிர்பார்த்திருந்த இவர்களுடைய திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. பல விதிமுறைகள், கட்டுப்பாடுகளுடன் பல கோடி செலவில் பிரம்மாண்டமாக இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்தது.

- Advertisement -

மதுரைக்கு வந்த கத்ரீனா கைப்:

இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்கள். இந்நிலையில் மும்பையில் இருந்து மதுரைக்கு கத்ரீனா கைஃப் வந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் மதுரையை அடுத்துள்ள தொட்டப்பநாயக்கனூரில் ‘மவுன்ட் வியூ’ என்ற பள்ளி இருக்கிறது. அந்த பள்ளியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்காக தான் தற்போது கத்ரீனா வந்திருந்தார். மேலும், தொடக்க நாள் விழா நிகழ்ச்சிக்காக அந்த பள்ளியின் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து கத்ரீனா நடனமாடிய வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

ரிலீப் புராஜெக்ட் இந்தியா:

அது மட்டும் இல்லாமல் இந்த பள்ளிக்கும் கத்ரீனாவின் குடும்பத்துக்குமே நீண்ட நாள் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் விழிப்புணர்வு எடுக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தன்னார்வல அமைப்பு தான் ரிலீப் புராஜெக்ட் இந்தியா. இந்த அமைப்பு 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின் 2015ல் மதுரைக்கு அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்காகவே இந்த அமைப்பின் மூலம் மவுண்ட் வியூ என்ற பள்ளி உருவாக்கப்பட்டது. மேலும், கத்ரீனா கைஃபின் அம்மா மேரி சுசானா டர்கோட்டி தான் இந்த குழு அமைப்பின் உறுப்பினராக இருக்கிறார்.

-விளம்பரம்-

பள்ளி விழாவில் கத்ரீனா கைஃப்:

அதுமட்டுமில்லாமல் மவுண்ட் வியூ பள்ளியின் கல்வி ஆலோசகராகவும் மேரி சுசானா இருக்கிறார். இவர் பல தன்னார்வ நிறுவனங்களில் செயல்பட்டு வருகிறார். அப்படித்தான் இவர் இந்த மவுண்ட் வியூ பள்ளியை தொடங்கி தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இந்த பள்ளியின் தொடக்க விழாவில் கத்ரீனா கைஃப் மற்றும் அவர் அம்மா மேரி சுசானா கலந்து கொண்டிருந்தனர். இந்த விழாவில் கத்ரீனா கைஃப் அரபி கூத்து பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். பின் இந்த விழாவில் கலந்து கொண்டது குறித்து கத்ரீனா கைஃப் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

கத்ரீனா கைஃப் பதிவிட்ட பதிவு:

அதில், மவுன்ட் வியூ பள்ளியின் தொடக்க நாள் விழா நிகழ்ச்சியை அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடி இருக்கிறோம். இந்த நேரத்தில் நிதி அளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளேன். அவர்களால் தான் இன்று மூன்று வகுப்பறைகளை திறக்க முடிந்தது. இந்த பள்ளியை நிர்வகித்து வரும் என்னுடைய அம்மாவையும் தம்பியையும் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த பள்ளி மிகவும் அழகாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி கத்ரீனா கைப் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை தொடர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement