தற்போது, காவ்யா மாதவன் நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். அவரது வளையக்காப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இந்நிகழ்ச்சிக்காக, அவரது கணவர் நடிகர் திலீப் ஆலப்புழாவில் நடைபெற்று கொண்டிருக்கும் படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பியுள்ளார். தற்போது 34 வயதாகும் காவ்யா முதல் முறையாக தாய்மை அடைந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். மேலும் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி அவருடைய பிறந்த நாள் அன்று நடைபெற்றதால் அது அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்று நம்பலாம். காவ்யா மாதவன் 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 தேதி கேரளாவில் பிறந்தவர் ஆவார்.Birthday Wishes & Hearty Congrats To Mom To Be #KavyaMadhavan pic.twitter.com/QK785Rdrqv
— SecondShow Media ™ (@2ndShowMedia) September 19, 2018
சமீபத்தில், நடிகர் திலீப் மலையாள நடிகை ஒருவர் தொடர்ந்த பலாத்கார வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




