இந்த இரண்டு நடிகைகள் யார் தெரியுமா? ரெண்டு பேரும் எஸ் கேவிற்கு ஜோடியா நடிச்சவங்க தான்.

0
1029
keerthi
- Advertisement -

சினிமா உலகில் தலைமுறை தலைமுறையாக வாரிசுகள் படங்களில் நடித்தும், இயக்கியும் வருவது வழக்கமான ஒன்று. அதிலும் பல பிரபலங்கள் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாகவும் உள்ளார்கள். அந்த வகையில் இவர்களும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் தான். அது வேற யாரும் இல்லைங்க. நம்ம நடிகை கீர்த்தி சுரேஷும், கல்யாணி பிரியதர்ஷனும் தான். கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் சிறு வயதில் இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது இதனை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்தும் வருகிறார்கள்.

-விளம்பரம்-

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பிரியதர்ஷன். இவருடைய மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இயக்குனர் பிரியதர்ஷன் அவர்கள் தமிழ், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் இயக்கி உள்ளார். தற்போது பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் அவர்களும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

கல்யாணி பிரியதர்ஷன் முதலில் பாலிவுட் திரைப்படத்தில் துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து துணை கலை இயக்குனராக திரைப்படத்தில் பணி புரிந்தார். பின் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘ஹலோ’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.கடந்த 2018 ஆம் ஆண்டு கூட கீர்த்தி சுரேஷுக்கு நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி இருந்தார். அப்போது கல்யாணி பதிவிட்ட புகைப்படம் தான் இது.

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ என்ற படத்திலும் இவர் நடித்து இருந்தார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும், கீர்த்தி சுரேஷும் சிறுவயதிலிருந்தே நல்ல நெருங்கிய தோழிகள். இவர்களுடைய குடும்பமும் நீண்டநாள் நெருங்கிய நல் உறவில் உள்ளது.

-விளம்பரம்-
Advertisement