சினிமா நடிகர்களின் சம்பளம் கோடிகளை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சில முன்னணி நடிகர்களின் சம்பளம் அவர்களின் நடிக்கும் படத்தின் பாதி பட்ஜெட்டை முழுங்கிவுகிறது. அவ்வளவு ஏன் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் மட்டும் 5 கோடி என்ற தகவலும் சில நாட்களுக்கு முன்னர் வந்தது.
இந்நிலையில் தனது சம்பளத்தை கோடிகளில் நிர்ணயித்துள்ளார் மற்றும் ஒரு மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ். தமிழில் 2015 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடித்த “இது என்ன மாயம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது இளையதளபதி விஜய் நடிக்கும் விஜய் 62 படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சாமி 2 , சண்டக்கோழி 2 என்று வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான “நடிகையர் திலகம் ” என்ற படத்தில் சாவித்ரியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக 1.5 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
நடிகையர் திலகம் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் சிவாஜியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கில் “மஹந்தி” என்று டப் செய்யப்பட்டும் இருக்கிறது. இந்த படத்தில் சாவித்ரியின் வேடத்தில் நடிக்க தான் மிகவும் சிரமப்பட்டதாகவும், படப்பிடிப்பின் கடைசி நாளில் தான் அழுதே விட்டதாகவும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.