பழைய பப்லி கீர்த்தி சுரேஷை எப்போது பார்க்கலாம் – ரசிகரின் கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் பதில்.

0
738
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தனது அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் கீர்த்திசுரேஷ் தெலுங்கில் நடித்த மகாநதி திரைப்படம் கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது அதைத்தொடர்ந்து அம்மணியின் புகழ் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடிப்பதாக இருந்த படம் கைநழுவி போனது. அதற்கு முக்கிய காரணமே அம்மணி கஉடல் மிகவும் ஒல்லியாக ஆனதால் தான் என்று கூறப்பட்டது. இருப்பினும் பாலிவுட்டில் இன்னொரு படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அம்மணி சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், எப்போதும் நாங்கள் பழைய பப்லியான கீர்த்தி சுரேஷை பார்க்கலாம் என்று கேட்டிருந்தார். அதற்கு மிக விரைவில் என்று பதில் அளித்துள்ளார். அதே போல உங்களின் ஹெட்டர்ஸ் பற்றி சொல்லுங்கள் என்றதற்கு, அவர்கள் இல்லாமல் நான் இப்போது இருக்கும் நிலையில் இருந்திருக்க மாட்டேன் என்று பதில் கொடுத்துளளார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாரின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. `முள்ளும் மலரும்’ படம்போல ரஜினி நடிக்கும் அண்ணண் – தங்கச்சி சென்ட்டிமென்ட் கதை இது. ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரஜினியின் மனைவியாக நயன்தாராவும், ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்புவும், மீனாவும் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement