மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து பேட்டியில் குஷ்பு கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. கேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டிப்போட்டு இருந்தது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். பின் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதன் பின் விஜயகாந்தினுடைய பணியை பாராட்டி ‘பத்மபூஷன்’ விருது சில மாதங்களுக்கு முன் இந்திய அரசு அறிவித்து இருந்த நிலையில், அவரின் மறைவுக்கு பின்பு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி மர்முவிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார். இதற்கு ரசிகர்கள், தேமுதிக தொண்டர்களும் பலருமே வாழ்த்தி சந்தோஷப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் குறித்த தகவல்:
மேலும், விஜயகாந்த் அவர்கள் நடிப்பையும் தாண்டி பெரிய ஹீரோ என்ற தலைகனம் இல்லாதவர். அனைவருடன் சேர்ந்து பழகி உண்ணும் குணம் கொண்டவர். பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உதவி செய்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு ஆரம்பத்தில் உதவி இருந்தது விஜயகாந்த் தான். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே விஜயகாந்த் குறித்த செய்திகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

குஷ்பூ பேட்டி:
அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயகாந்த் குறித்து குஷ்பூ, நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது எந்த ஈகோவும் பார்க்காமல் வேலை செய்த ஒரே கலைஞர் விஜயகாந்த் தான். அப்போது தமிழ் சினிமாவில் பெப்சி பிரச்சனை நடந்து கொண்டிருந்தது. இதனால் மும்பையில் இருந்து பல தொழில்நுட்ப கலைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார்கள்.

விஜயகாந்த்தை கிண்டல் செய்த ஹிந்திக்காரர்கள்:
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த விஜயகாந்த் உட்பட சிலர் அங்கு சென்றிருந்தோம். ஆனால், அங்கு விஜயகாந்த் சார் உட்கார சேரே இல்லை. அங்கிருந்த இந்திக்காரர்கள் பெட்டில் உட்கார்ந்து விஜயகாந்தை பார்த்து, இவன் எல்லாம் ஒரு ஹீரோவா என்று இந்தியில் கிண்டலாக பேசி இருந்தார்கள். இதை கேட்டவுடன் எனக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது. அவர்களிடம் சண்டை போட போயிட்டேன். ஆனால், விஜயகாந்த் சார் என்னை தடுத்து நிறுத்தி வெளியே அழைத்து வந்து நமக்கு வேலை ஆகவேண்டும், சண்டை வேண்டாம் என்று சமாதானம் செய்தார்.
https://www.youtube.com/watch?v=mgfJ_oNp0p4
விஜயகாந்த் சொன்னது:
அதற்கு நான், உங்களைப் பற்றி தப்பாக பேசுகிறார்கள். என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அடித்து விடுவேன் என்றெல்லாம் சொன்னேன். அவர், அதை விட்டு விடு அவர்களுக்கு என்ன வேண்டும் என்று மட்டும் கேள். நமக்கு பின்னாடி 200 குடும்பங்கள் இருக்கிறது என்று சொன்னார். இப்படி ஒரு பிரச்சனை என்றால் அவர் சமூகமாக முடித்துவிடுவார். அவரை மாதிரி யாருமே இருக்க முடியாது. திரைத்துறையில் பல தொழில்நுட்ப கலைஞருக்கு விஜயகாந்த் தன்னால் முடிந்த உதவியை செய்திருக்கிறார். யாருக்குமே அவர் உதவி செய்யவில்லை என்று கூற முடியாது என்று எமோஷனலாக கூறியிருக்கிறார்.






