‘சரண்யா பொன்வண்ணன் மாதிரி அம்மா கேரக்டருக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு சொல்லுவாங்க’ – பூவே உனக்காக சீரியல் கிருபா

0
1031
- Advertisement -

பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். சீரியல்கள் மட்டுமில்லாமல் அதில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். மேலும், சினிமா நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் சின்னத்திரை சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கிருபா. இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல் சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பூவேஉனக்காக என்ற தொடரில் ஹீரோவின் அம்மாவாகவும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே 2 தொடரிலும் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். பத்து வருடம் நானும் என் கணவரும் சேர்ந்து தான் வாழ்ந்தோம். பிறகு பிரச்சினை காரணமாக என் பசங்களை கூட்டிட்டு தனியாக வந்து விட்டேன்.

- Advertisement -

நடிகை கிருபா அளித்த பேட்டி:

பசங்களுக்காக நான் வாழ ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நான் ஆச்சி மசாலா கம்பெனியில் HR ஆக வேலை பார்த்தேன். அங்கு இருக்கும் போது விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் திடீரென்று ஒருநாள் விஜய் டிவியில் இருந்து போன் பண்ணி சீரியலுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமா? என்று கேட்டார்கள். என் பிள்ளைகளிடம் இது பற்றி கேட்டதற்கு உனக்கு ஓகேனா பண்ணுமா என்று சொன்னார்கள். சரி என்று நான் ஆச்சி மசாலாவில் பார்த்துகிட்டு இருந்த வேலையை விட்டுவிட்டு முன்பின் அறிமுகமில்லாத மீடியாவிற்க்குள் நுழைந்தேன்.

மீடியாவிற்குள் நுழையும் போது சொன்ன விஷயம்:

மேலும், மீடியாவிற்குள் வந்த போது பலரும் பலவிதமாக பேசினார்கள். உண்மையை சொல்றேன் இதுவரைக்கும் மீடியாவில் அப்படி ஒரு விஷயத்தை நான் சந்திக்கவில்லை. பின் சரண்யா பொன்வண்ணன் மாதிரி நீயும் அம்மா கேரக்டருக்கு கரெக்டா இருப்ப என்று என் ஃப்ரென்ட்ஸ் எல்லாருமே சொல்வார்கள். அவங்களை மாதிரி பெரிய ஹீரோவுக்கு அம்மாவாக இல்லை என்றாலும், வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இப்படியான ஒரு படத்தில் நடித்து எல்லோருக்கும் நான் அம்மா கதாபாத்திரத்திற்கு செட் ஆக வேணா? என்ற ஒரு தயக்கம் இருக்கும்.

-விளம்பரம்-

சிம்புவுடன் நடித்த அனுபவம்:

இந்த படம் வெளிவந்ததும் நிச்சயம் எல்லோருக்கும் என் மேல் நம்பிக்கை வரும் என்று நம்புகிறேன். மாநாடு படத்தில் சிம்புவுடன் சேர்ந்து நடிக்கும் போது அவர் கிட்ட சகஜமாக பேசினேன். அவர் ஒரு நல்ல மனிதர் ஜாலியாக பேசினார். படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தான் அடுத்த சூட்டிங் ஆரம்பித்தார்கள். ஒரு வருடம் கழித்து அவரை பார்த்த போது அவ்வளவு எடை குறைத்து இருந்தார். எப்படி சார் இப்படி என்று கேட்டதற்கு ஹார்ட் ஒர்க் மேடம் என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். அதேபோல் தளபதி விஜயின் மெர்சல் படத்திலும் நடித்தேன். என்னுடைய நடிப்பைப் பார்த்து அட்லி சூப்பர் மேடம் என்று சொன்னார்.

விஜய் உடன் நடித்த அனுபவம்:

எனக்கு அப்படியே சந்தோஷமாக இருந்தது. என்னுடன் இருந்தவர்கள் எல்லோருமே பாராட்டினார்கள். அடுத்து உங்களுக்கு சினிமாவில் பெரிய நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு எல்லாம் இருக்கு என்று புகழ்ந்தார்கள். ஆனால், நான் நடித்த சீன் படத்தில் வரவே இல்லை. ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால், விஜய் சாரை பக்கத்திலிருந்து பார்த்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. உண்மையாலுமே அவரை மாதிரி நடிப்பது ரொம்ப கஷ்டம். ஒரே டேக்கில் எவ்வளவு பெரிய டயலாக்காக இருந்தாலும் சூப்பராக செய்து முடிப்பார். சர்க்கார் படத்திலும் அவருடன் நடித்து இருக்கிறேன். ஆனால், மெர்சல் படத்தில் அவருடன் நடித்த காட்சிகள் மாறி இல்லை. கூட்டத்தில் ஒரு ஆளாக நான் நடித்திருக்கிறேன் என்று ஜாலியாக பேசி இருந்தார்,

Advertisement