-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

திருமணம் முடிந்தும் ஓய்வு எடுக்க முடியவில்லை நான் ஓடிக்கொண்டே இருந்தேன் – மனம் திறந்த கே.ஆர் விஜயா

0
95

தன்னுடைய கணவர் பற்றி மனம் திறந்து கே.ஆர்.விஜயா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘புன்னகை அரசி’ என்றால் எந்த காலமாக இருந்தாலும் நமக்கு நினைவில் நிற்கும் முதல் முகம் கே. ஆர்.விஜயா தான். இந்த பட்டத்தோடு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பயணித்து, மாபெரும் சாதனையாளராக விளங்கி வருகிறார் கே.ஆர். விஜயா. மேலும், இவர் 1970களின் தொடக்கத்திலேயே எம்ஜிஆர், சிவாஜி போன்ற மிகப் பெரிய ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய ஒரு ஹீரோயின்.

-விளம்பரம்-

கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் இவருடைய கலைப்பயணம், தொடங்கி 2025 ஆம் ஆண்டிலும் சின்னத்திரை நாடகங்கள் மூலம் தொடர்ந்து கொண்டு வருகிறது என்றால், இது ஒரு இமாலய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இவர் இந்த 60 ஆண்டுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு எண்ணற்ற சின்னத்திரை நாடகங்களிலும் நடித்து வருகின்றார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். கடைசியாக இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ராயர் பரம்பரை’ என்னும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கே. ஆர். விஜயா திரைப்பயணம்:

இதற்கிடையே இவர் 1966 ஆம் ஆண்டு மடத்தில் வேலாயுதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவரின் கணவர், தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்டவர். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நல குறைவால் குறைந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் கே.ஆர் விஜயா, நான் 1963ல் தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன். இத்தனை வருடம் கடந்து விட்டது. இதெல்லாம் எனக்கு கிடைத்த பாக்கியமாக நான் நினைக்கிறேன். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய நிஜப் பெயர் தெய்வநாயகி. எம் ஆர் ராதா சார் தான் என் பெயரை மாற்ற சொன்னார்.

கே.ஆர். விஜயா பேட்டி:

-விளம்பரம்-

அப்படி வந்தது தான் கே.ஆர். விஜயா. எங்க வீட்டில் ஐந்து பெண்கள். நான்தான் மூத்த பெண். என் தலையில் தான் எல்லா பொறுப்பும் வந்தது. நான் சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்பத்தில் சொன்ன எல்லா வேலையுமே செய்தேன். எனக்கு படிப்பும் இல்லை, எதுவும் தெரியாது. பெரிதாக சாதிக்கணும் என்றெல்லாம் எனக்கு எண்ணமும் வந்ததில்லை. நான் முதல் படம் பண்ணும் போது எனக்கு 14 வயது தான். அந்த வயதில் எனக்கு கதாநாயகியாக நடிக்கிறதோ, படம் ரிலீஸ் ஆனதுக்கு பிறகு அது எப்படி போகும்? நம்மை எப்படி பார்ப்பாங்க என்ற பதட்டம் எல்லாம் இல்லை.

-விளம்பரம்-

கணவர் பற்றி சொன்னது:

நானும் திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால், என் கணவர் மூணு மாசம் ஆகிவிட்டது. இதற்கு மேல் வீட்டில் இருந்தால் சோம்பேறி ஆகி விடுவாய் என்று சொல்லி என்னை திரும்ப நடிக்க அனுப்பி விட்டார். அதோடு அவர், நீ சாகுற வரைக்கும் நடிக்கணும். ரொம்ப சந்தோஷமாக இருக்கணும். தொழிலை விட்டுக் கொடுக்கக் கூடாது. உன்னால் முடியுற வரைக்கும் நடி என்று சொன்னார். குழந்தை பிறந்த பிறகு கூட நான் அவரிடம், எப்படி குழந்தையும், சினிமாவையும் மெயின்டன் பண்ண முடியும் என்றெல்லாம் கேட்டேன்.

வாழ்க்கை பற்றி சொன்னது:

அதெல்லாம் சினிமாவில் முடியும். நீ நடத்திக் காட்டுன்னு சொன்னார். அதற்கு பிறகு ஷூட்டிங்கில் எல்லோரும், எனக்கு வீட்டில வேலை எல்லாம் இருக்கு என்று சொல்லி சீக்கிரமாக அனுப்பிவிட்டார்கள். நான் சினிமாவுக்கு வந்து பத்து வருஷத்திலேயே நூறு படம் நடித்து விட்டேன். எனக்கு நடிக்கணும், சாப்பிடணும் தூங்கணும். இது தவிர வேறு எதுவும் தெரியாது. இப்ப வரைக்கும் அதை தான் நான் செய்கிறேன். எல்லாம் வீட்டிலேயே இருக்கு. அதனால் எதுக்கும் வெளியே போக மாட்டேன். அப்படியும் ஏதாவது வேணும் என்றால் என்னோட கணவர் தான் கூட்டிட்டு போவார் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news