மூக்குத்தி அம்மன் 2 படத்தின் சர்ச்சை தொடர்பாக நடிகை குஷ்பூ போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதை அடுத்து தற்போது மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி தான் இயக்குகிறார். இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, மீனா, ரெஜினா, மைனா நந்தினி, இனியா உட்பட படத்தில் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பூஜை பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருந்தது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரிக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த செய்தி தான் பகிரப்பட்டு வருகிறது. படம் தொடங்கியதில் இருந்தே பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கின்றது. முதலில் ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தை இயக்குவதற்கு மிகப்பெரிய அளவில் சம்பளத்தை கேட்டிருந்தார். அது முடியாது என்பதால் தான் சுந்தர்.சி எடுக்க தொடங்கினார். இதுதான் பிரச்சனைக்கான ஆரம்ப புள்ளி.
மூக்குத்தி அம்மன் 2:
இந்த பட பூஜையில் மீனாவை நயன்தாரா அவமரியாதை செய்திருக்கிறார் என்றும், அங்கு இருப்பவர்கள் உடன் சரியாக முகம் கொடுத்து கூட பேசவில்லை நயன் என்றெல்லாம் கூறப்பட்டது. அதோடு இந்த படத்தின் பூஜையிலும் தனக்கு தான் முதல் மரியாதை கொடுப்பார்கள் நயன்தாரா நினைத்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் நயன்தாராவிடம் பேச மீனா பலமுறை முயற்சி செய்தார். இருந்தாலுமே, அவர் கண்டு கொள்ளவே இல்லை. தற்போது படத்தினுடைய சூட்டிங் தொடங்கிவிட்டது. கோயம்புத்தூர், பொள்ளாச்சி பகுதியில் தான் லொகேஷன் பார்த்தார்கள்.
நயன் பற்றிய சர்ச்சை:
அங்குள்ள கோயில்களில் சில காட்சிகளை எடுக்க சுந்தர்.சி திட்டமிட்டார். ஆனால், நயன்தாரா ஏகப்பட்ட பிரச்சினைகளை செய்து கொண்டிருக்கிறார். சென்னையில் தான் ஷூட்டிங் வைக்கணும், பொள்ளாச்சி எல்லாம் வேண்டாம். இத்தனை மணிக்கு தான் ஷூட்டிங் வருவேன். இந்த துணிகளை தான் போடுவேன் என்றெல்லாம் நிறைய நிபந்தனைகள் போட்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் முதல் பாகத்தில் நடித்த ஊர்வசியை இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க சுந்தர்.சி கேட்டிருக்கிறார்.
படம் குறித்த சர்ச்சை:
அவர் மூட்டு வலி பிரச்சனை காரணமாக ரொம்ப தூரம் டிராவல் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார். அதோட அவருடைய கால் சீட்டும் கிடைப்பதில் பிரச்சினையாக இருக்கிறது. அதேபோல் இந்த படத்தினுடைய வில்லன் துனியா விஜய். அவருடைய பிஸியான செட்டில் இருக்கும் மத்தியில் கோயம்புத்தூருக்கு வருவது நிறைய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது . அதோடு படப்பிடிப்பு தொடங்கிய உடனே நயன்தாராவுக்கு உதவி இயக்குனர் ஒருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஷூட்டிங் ஸ்பாடில் இருந்து நயன் கிளம்பிவிட்டதாக எல்லாம் தகவல் வந்தது.
To all the wellwishers of #SundarC Sir. Too many unwanted rumors are floating about ##MookuthiAmman2 . Please loosen up. Shoot is underway smoothly and going as planned. Everyone knows Sundar is a no nonsense person. #Nayanthara is a very professional actor who has proved her…
— KhushbuSundar (@khushsundar) March 25, 2025
குஷ்பூ பதிவு:
இப்படி எல்லா பக்கத்திலும் இந்த படத்திற்கு பிரச்சனைகள் இருப்பதால் சுந்தர்.சி ரொம்பவே வேதனையில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குஷ்பு போட்டிருக்கும் பதிவுதான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர், மூக்குத்தி அம்மன் 2 படம் பற்றி தேவையில்லாத வதந்திகள் பரவி வருகிறது. அது எதுவுமே உண்மை கிடையாது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து கொண்டுதான் இருக்கிறது. நடப்பதெல்லாம் நன்மைக்கே நடக்கும். உங்கள் ஆசிர்வாதத்தையும் அன்பையும் மட்டுமே நாங்கள் நம்புகிறோம். எப்போதும் எங்களுடன் இருப்பதற்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.