கைது செய்யப்பட்ட பின் போலீசுடன் வேனில் செல்ஃபீ எடுத்து வெளியிட்ட குஷ்பூ.

0
699
kushboo
- Advertisement -

திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி நடத்திய போராட்டத்தில் நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டுள்ளார். மனுதர்மம் அனைத்து பெண்களையும் விபச்சாரிகள் என குறிப்பிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு, ஒரு மாதம் கழித்து சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கினர். திருமாவளவன் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பெண்கள் குறித்து அவதூறாக பேசி விட்டார் என்று சர்ச்சை எழுந்தது.

-விளம்பரம்-

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. திருமாவளவனின் சிதம்பரம் தொகுதியில் அவரை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜகவின் நடிகை குஷ்பு சென்னையில் இருந்து நேற்று காலை சிதம்பரத்துக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். இந்த நிலையில்,  தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்தனர்.

- Advertisement -

முட்டுக்காடு அருகே சுந்தரவதனம் எஸ்.பி தலைமையிலான போலீஸ், குஷ்புவை கைது செய்தது. கைது செய்யப்பட்ட குஷ்பூ வேனில் போலீஸ் அதிகாரிகளுடன் செஃபி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கைது செய்யப்பட்டபின்னர் பேசிய குஷ்பூ, கடைசி மூச்சு இருக்கும்வரை பெண்களின் மாண்புக்காக போராடுவோம். விடுதலை சிறுத்தைகள் எனது கைதால் மகிழ வேண்டாம். எங்களின் பலத்தை கண்டுதான் கைது செய்துள்ளனர். நாங்கள் எதற்காகவும் பின்வாங்கப்போவதில்லை எண்டு கூறியிருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, குஷ்பு தங்க வைக்கப்பட்ட கேளம்பாக்கம் சொகுசு விடுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேர் திடீரென முற்றுகையிட்டனர். குஷ்புவே மன்னிப்பு கேள்! குஷ்புவை கைது செய்! என அவர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு சொகுசு விடுதிக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி நடத்தினர்.

-விளம்பரம்-

Advertisement