பள்ளி என்பது நீங்கள் என்ன அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் இடம் அல்ல – ஹிஜாப் விவகாரத்தில் நடிகை குஷ்பூவின் பதிவு.

0
550
kushboo
- Advertisement -

கர்நாடகாவில் கொழுந்துவிட்டு பிரச்சனையாக எரியும் ஹிஜாப் விவகாரத்தில் நடிகையும் பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளருமான குஷ்பூ கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பூ ‘ கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் பற்றியது. பள்ளியில் சீருடை அணிந்ததற்காக நான் நம்புகிறேன். விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, ஒரு இந்தியராக உங்கள் பலத்தைக் காட்டுவதற்காக. இதில் அரசியல் செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும். நம் பள்ளி நாட்களில் எப்படி இருந்தோமோ, அதே போல் ஒன்றாக இருப்போம்.

-விளம்பரம்-

என் பள்ளி நாட்களில் சீருடையைத் தவிர வேறு எதையும் அணிந்த குழந்தைகளை நான் பார்த்ததில்லை. என் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது கூட இல்லை. யாரும் குறை கூறவில்லை. உங்கள் மதத்தை உங்கள் பேட்ஜாக பள்ளிக்கு அணிய வேண்டும் என்ற இந்த திடீர் தூண்டுதல் ஏன்?பள்ளிகளுக்கு விதிகள் இல்லையா? சரஸ்வதி அறிவின் சின்னம். சில பள்ளிகளில் சிலை அகற்றப்படுமா என்று கேட்பவர்கள், தயவு செய்து உங்கள் அறியாமையை வெளியில் காட்ட வேண்டாம் என்று கூறுகிறேன்.

- Advertisement -

பள்ளி ஒரு மதம் அல்ல :

நீங்கள் இயேசுவை கான்வென்ட்டில் ஏற்றுக்கொண்டால், அல்லாஹ்வை மதர்சாவில் ஏற்றுக்கொண்டால், ஏன் சரஸ்வதியை ஏற்கவில்லை? இதில் பாரபட்சமான அணுகுமுறை மிகவும் தெளிவாக உள்ளது. பள்ளி ஒரு மதம் அல்ல. பள்ளி என்பது நீங்கள் என்ன அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் இடம் அல்ல. இது ஒழுக்கம் நிறைந்த இடம். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் கற்றலில் ஒற்றுமையையும் மரியாதையையும் காட்ட ஒரு விதியைக் கொண்டிருக்க வேண்டும்.

பள்ளிகளில் நடத்தை விதிகளை மதிக்க வேண்டும் :

நீங்கள் வெளியில் என்ன உடுத்துகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். பள்ளிகளில் நடத்தை விதிகளை மதிக்க வேண்டும். கற்றலை மதிக்கவும். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நம் குழந்தைகள் நமது பெருமை. அவர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் ஏன் ஆர்வம் காட்டுகின்றன? ஒரு கையால் கைதட்ட முடியாது. அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும். அவர்களை ஒருவரையொருவர்எதிர்மறையாக பிணைக்கக்கூடாது. எல்லாம் அரசியலாக இருக்க முடியாது.

-விளம்பரம்-

குஷ்பூ என்னும் நகத்கான் :

நடிகை குஷ்பூ பிறப்பால் ஒரு முஸ்லீம் அவருடைய உண்மையான பெயர் நகத்கான். மேலும், இவர் ஒரு இந்துவான சுந்தர் சியை திருணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இந்து வழிபாட்டை தான் நடிகை குஷ்பூ அதிகம் பின்பற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இவரது மதத்தை வைத்து அடிக்கடி சிலர் இவரை விமர்சனமும் செய்து இருக்கின்றனர். சமீபத்தில் கூட மாணவி ஒருவரின் தற்கொலை விவகாரத்தில் குஷ்பூ கண்டனம் தெரிவித்து பேசி இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-231-1024x796.jpg

தன்னை விமர்சித்தவர்களுக்கு குஷ்பூவின் பதில் :

அப்போது நெட்டிசன் ஒருவர், தமிழகத்தில் கட்டாய மத மாற்றம் இல்லை என்று முதல்வர் கூறமுடியுமா? முஸ்லிமாக பிறந்து இந்துவாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் நீ தான் சொல்லணும் என்று குஸ்பூவை விமர்சித்து கூறி இருந்தார்.இதை பார்த்த குஷ்பு பதிலடி கொடுக்கும் வகையில் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் குஷ்பூ கூறி இருப்பது, டேய் லூசு, எவன்டா மதம் மாறினா? Marriage special act கேள்வி பட்டதே இல்லையா? இல்ல உன்ன மாதிரி கோமாளிக்கு யோசிக்கிற சக்தி இல்லையா? வேலை இருந்தா போய் பாரு. டாக்டர் கலைஞர் பேர் கெடுக்காதே. டிஎம்கே இருந்தப்ப நான் யாருன்னு உனக்கு தெரியலன்னா, மூடிட்டு போவியா என்று தன்னை விமர்சித்தவரை லெப்ட் ரைட் என்று வெளுத்து வாங்கி இருந்தார்.

Advertisement