தேர்தல் நெருங்கும் வேளையில் பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த குஷ்பூ – அவரே வெளியிட்ட அறிக்கை.

0
535
- Advertisement -

பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து நடிகை குஷ்பு விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதேபோல் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஜூன் 1ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது.

-விளம்பரம்-

தமிழகத்தில் ஏப்ரல் 19 நடைபெற இருக்கிறது. மேலும், வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4 நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மற்றும் பாஜக கூட்டணி என்று கூட்டணி அணிகளும், நாம் தமிழர் கட்சி மற்றும் தனித்து நிற்கிறது. தற்போது அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பிரபலங்கள் பலருமே தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

குஷ்பூ எழுதிய கடிதம்:

அந்த வகையில் குஷ்புவும் பாஜாவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது திடீரென்று இவர் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது என்று தேசிய தலைவர் நட்டாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர், எனக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் நான் இனிவரும் தேர்தல் பிரச்சார பணிகளை தொடர முடியாது. ஆனால், மீண்டும் கம்பேக் கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார். வாழ்க்கை நமக்கு எல்லாம் தெரிந்த படி கணிக்க முடியாது.

குஷ்பூ உடல்நிலை:

சில சேரங்களில் நாம் நல்ல நிலையில் இருப்பது போல் இருக்கும், சில நேரங்களில் சில விஷயங்கள் நம்மை சோதிக்கும். நானும் அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் இருக்கிறேன். கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் என்னுடைய வாலெலும்பில் முறிவு ஏற்பட்டது. இந்த பாதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னை ரொம்ப கஷ்டப்படுத்தி வருகிறது. இதற்காக நான் தொடர்ந்து சிகிச்சை எடுத்தும் வருகிறேன். இருந்தாலும், பலன் இல்லை. இதனால் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று என்னுடைய மருத்துவ குழு எனக்கு பலமுறை அறிவுறுத்தினார்கள்.

-விளம்பரம்-

மருத்துவர் அறிவுரை:

இருந்தும் நான் பிரச்சாரங்களை மேற்கொண்டேன். ஆனால், தற்போது என்னுடைய நிலை மோசமாக இருக்கிறது. மேலும், அர்ப்பணிப்புள்ள காரியகர்த்தா மற்றும் நம்முடைய பிரதமர் திரு மோடி, ஒரு உண்மையான அர்ப்பணிப்புள்ள பிஜேபி போர் வீரன் என்ற முறையில் நான் என்னுடைய மருத்துவரின் அறிவுரை கூறியும், வலி வேதனை இருந்தாலும் என்னால் முடிந்த வரை உழைத்து பிரச்சாரம் செய்தேன். இருந்தும் என் நிலை மோசமாகி இருக்கிறது. பல ஆலோசனைகளுக்கு பிறகு தான் என்னுடைய உடல்நிலை குணப்படுத்தும் நிலையில் இருக்கிறேன். என்னுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும் சிகிச்சை தாமதிக்க முடியாது.

மோடி குறித்து சொன்னது:

தேர்தல் நேர பிரச்சாரங்களில் நெடுந்தூரப் பயணம், நெடுநேரம் அமர்ந்து கொண்டு செல்ல வேண்டும். இதனால் என்னால் பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. இருந்தாலும், சமூக வலைத்தளம் மூலம் பாஜகவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கும் பிரச்சாரத்தின் போது ஒரு பகுதியாகவும் தொடர்ந்து ஆதரவளிப்பேன். நம்முடைய பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்பதை நான் எங்கிருந்தாலும் உரத்த குரலில் ஆரவாரம் செய்வதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement