ஒரே சமயத்தில் உடல் எடை குறைத்த பிரபு, குஷ்பூ – சின்னத்தம்பி 2 குறித்து கேட்ட ரசிகருக்கு குஷ்பூவின் ரியாக்ஷன்.

0
1834
prabhu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக குஷ்புவும், பிரபுவும் திகழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அதோடு குஷ்பு, பிரபு என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது சின்னத்தம்பி படம் தான். இந்த படத்தின் மூலமாக தான் இவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இந்த நிலையில் குஷ்பு, பிரபு ஆகியோரின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Chinna Thambi | 150 All-Time Best Cult Tamil Films by Behindwoods | Part 01

அப்படி என்ன விஷயம் என்றால், சமீபத்தில் குஷ்பு அவர்கள் தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில் போட்டிருந்தார். இதை அடுத்து சில நாட்களுக்கு முன்பு நடிகர் பிரபு அவர்கள் உடல் பருமனை சிக்கென்று குறைத்து இருக்கும் அழகான புகைப்படத்தை போட்டு இருந்தார். இது சின்ன தம்பி பிரபு வா! என்று கேட்கும் அளவிற்கு அவர் உடல் எடையை குறைத்து இருந்தார். இப்படி இவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு உடல் எடையை குறைத்து போட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

இதையும் பாருங்க : இதையே அரை குறை ஆடைனு சொல்றீங்களே – இங்க பாருங்க மேலாடை அணியாமலே போஸ் கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் பிரபு அவர்கள் எப்போதும் தன்னுடைய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட மாட்டார். தற்போது உடல் எடையை வேகமாக குறைத்து போட்ட போட்டோவை பார்த்து அனைவரும் குஷ்புவின் போட்டோவுக்கு பதிலடிக்கு இந்த போட்டோ இருக்குமோ என்றும், ஒருவேளை குஷ்புவும் பிரபுவும் இணைந்து மீண்டும் படத்தில் நடிக்கப் போகிறார்களா? என்றும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இவர்கள் இப்படி உடல் எடையை குறைத்து இருப்பதை பார்த்தால் ஒருவேளை சின்னத்தம்பி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஏற்பாடுகளாக இருக்குமோ? என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

1991-ஆம் வருடம் பி. வாசு இயக்கத்தில் வெளிவந்து தமிழ் சினிமாவில் ரெக்கார்டை பிடித்த படங்களில் சின்னதம்பி படமும் ஒன்று. இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இவர்களின் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பிரபு மற்றும் குஷ்புவின் புகைப்படத்தை போட்டு இயக்குனர் பி.வாசு அவர்கள் சந்திரமுகியின் இரண்டாம் பாகத்துக்கு முன்பே சின்னதம்பி இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த நடிகை குஷ்பு அவர்கள் சிரித்துக் கொண்டே ஸ்மைலியை அதற்கு பதிலாக பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. உண்மையிலேயே சின்னதம்பி 2 படம் வெளிவந்தால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement