கொரோனா பாதிப்பு. குஷ்பூ குடும்பத்தில் நேர்ந்த மரணம். திரையுலகினர் இரங்கல்.

0
6705
- Advertisement -

ஒட்டு மொத்த உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ் தான். இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-விளம்பரம்-

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. இதில் 86, 984 பேர் நலமடைந்து வீடு திரும்பி உள்ளனர் மற்றும் 5,164 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குஷ்புவின் உறவினர் ஒருவர் மரணமடைந்து உள்ளார். தற்போது இந்த தகவல் அறிந்து திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மும்பையில் வசிக்கும் நடிகை குஷ்பூவின் உறவினர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் சிகிக்சை பலன் இல்லாமல் இறந்து உள்ளார்.

தற்போது இதை நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதைப் பார்த்த பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஜூன் 30 ஆம் தேதி வரை ஐந்தாம் கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளது மத்திய அரசு. ஆனால், இந்த ஊரடங்கில் பல தளர்வுகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

-விளம்பரம்-
Advertisement