அட பாவீங்களா கடைசில குஷ்பூ கணக்கையே ஹேக் செஞ்சுட்டாங்களாம். புலம்பிய குஷ்பு.

0
1289
kushboo
- Advertisement -

தமிழ் சினிமாவின் 80,90 காலகட்டங்களிலேயே தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வந்தவர் நடிகை குஷ்பு . இவர் குழந்தை நட்சத்திரமாக தான் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். பின் நடிகை குஷ்பு அவர்கள் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம்16’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார். இவருடைய அழகிற்கும், நடிப்பிற்கும் என ரசிகர்கள் கூட்டம் இன்று வரை குறையவே இல்லை.

-விளம்பரம்-
View Kollywood Tamil cine actress Kushboo profile | Cinebilla.com

- Advertisement -

இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். நடிகை குஷ்பு அவர்கள் சினிமா திரை உலகில் மிக பிரபலமான இயக்குனர் சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு கொண்டார். உள்ளார்கள். தற்போது இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்து துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தற்போது நடிகை குஷ்பூ காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஆன நடிகை குஷ்பு அவர்கள் கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு எல்லாம் கடுமையான விமர்சனங்களை டுவீட்டரில் வெளியிட்டு வந்தார்.

-விளம்பரம்-

இதற்கு முன்பும் நடிகை குஷ்பு அவர்கள் பிரதமர் மோடி குறித்து பலவிதமாக விமர்சித்து வந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நடிகை குஷ்பூ ட்விட்டர் கணக்கில் இருந்து பிரதமர் மோடி குறித்தும், வேறு ஏதாவது குறித்தும் எந்தவொரு டுவீட்டுமே வெளியாகவில்லை. இதனால் நடிகை குஷ்பு அவர்கள் தற்போது தனது டுவிட்டர் கணக்கில் ஏற்பட்ட நிலை குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய டுவிட்டர் கணக்கு தற்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் கணக்கு பாஸ்வேர்டு மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டது என டுவிட்டர் எனக்கு ஒரு செய்தி அனுப்பி இருந்தது. யாரோ வேண்டாதவர்கள் என்னுடைய டுவிட்டர் கணக்கை மூன்று முறை மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து நுழைய முயற்சி செய்து உள்ளனர். மேலும், கடந்த 48 மணிநேரங்களாக என்னால் என்னுடைய டுவிட்டர் கணக்கை லாக் இன் செய்ய முடியவில்லை.

என்னுடைய டுவிட்டர் பாஸ்வேர்டையும் மாற்ற முடியவில்லை. அதோடு இது குறித்து டுவிட்டர் நிறுவனத்திடம் கேட்ட போது டுவிட்டர் தரப்பில் இருந்து எனக்கு சரியான உதவி கிடைக்கவில்லை. உடனே என்னுடைய கணக்கு ரத்து ஆக வாய்ப்புகள் உள்ளன என்று டுவிட்டர் தெரிவித்து இருந்தது. என்னுடைய டுவிட்டர் கணக்கில் என்ன நடக்கிறது? என்பது எனக்குப் புரியவில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

Kushboo (Actress) Height, Weight, Age, Wiki, Biography, Husband ...

தற்போது நடிகை குஷ்பூ அவர்கள் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

Advertisement