சிவன் கோவிலில் குஷ்பூ பாலபிஷேகம் செய்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை குஷ்பூ. உண்மையிலேயே குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான் ஆகும். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார்.
பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமே அவருடைய முதல் படமாகும். பின்னர் நடிகை குஷ்பூ அவர்கள் 80களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கியுள்ளார். சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. மேலும், ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள்.
குஷ்பூ திரைப்பயணம்:
இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிலும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து இருந்தார்.
குஷ்பூ நடித்த சீரியல்:
இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலில் வாரி குவித்து இருந்தது. அதேபோல் குஷ்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மீரா என்ற சீரியலில் நடித்து இருந்தார். இந்த தொடர் பெண்கள் சுதந்திரம், பெண்கள் உரிமை ஆகியவை மையமாக கொண்டதாக இருந்தது. இந்த தொடர் 62 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பானது. தற்போது இவர் பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். மேலும், குஷ்பு கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.
குஷ்பூ நடிக்கும் படம்:
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக குஷ்பூ நடித்து வருகிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் சில படங்களிலும் கமிட்டாகி குஷ்பூ பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இதனிடையே குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள்.
கோவிலில் அபிஷேகம் செய்த குஷ்பூ:
அதில் தற்போது குஷ்பூவின் மூத்த மகள் சினிமாவில் நடிகையாக முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகிருக்கின்றது. இந்த நிலையில் கோவிலுக்கு சென்று குஷ்பூ அபிஷேகம் செய்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, குஷ்பு அவர்கள் கோயிலுக்கு சென்று சிவனுக்கு தன்னுடைய கையால் பாலபிஷேகம் செய்து சாமி கும்பிட்டு இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தான் இணையத்தில் வெளியாகி இருக்கிறது .