அஜித் சாரை பார்த்தால் கண்டிப்பாக இதை கேட்பேன்..!நடிகை லைலா..!

0
730

தென்னிந்தியத் திரைப்பட நடிகையான லைலா தமிழ் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித்,சூர்யா,விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்த நடிகை லைலா.”தில், தீனா, மௌனம் பேசியதே “போன்ற ஹிட் திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.

Ajith Laila

திரையுலகில் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நிலைத்து நின்ற லைலா, கன்னடம்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். லலைலாவிற்கு எந்த திரையுலகிலும் நிலையான அடையாளம் கிடைக்காததால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 2006 அம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நடிகை லைலா கள்ளழகர் படத்திற்கு பின்னர் முதல்வன்,ரோஜா வானம், போன்ற படங்களில் நடடித்திருந்தாலும் அவருக்கு நல்ல ஒரு திருப்பு முனையாக அமைந்தது தல அஜித்தின் தீனா படம் தான். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை லைலா தீனா படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில் பேசிய அவர், அஜித் சார்தான் என் கிரஷ். அவரோடு ‘தீனா’, ‘பரமசிவன்’, ‘திருப்பதி’ படத்துல ஒரு பாட்டுன்னு சில படங்களில் நடிச்சிருக்கேன். நாங்க சேர்ந்து நடிச்ச ‘தீனா’ படத்தில் இருந்துதான் அவருக்கு ‘தல’ன்னு அடைமொழி வந்தது. அஜித் சார் ஷூட்டிங் ஸ்பாட்ல பிரியாணி சமைச்சுப் போடுவார்னு கேள்விப்பட்டேன்; ஆனா, நான் அவரோட நடிக்கும்போது எனக்கு பிரியாணியெல்லாம் செஞ்சு தரலை. அடுத்து அவரைப் பார்க்கும்போது எனக்கு பிரியாணி செஞ்சு கொடுங்கன்னு கேட்கணும் என்று தெரிவித்துள்ளார்.