நடிகை ‘லைலா’ இப்போ எப்படி இருக்காங்க என்ன பன்றாங்க தெரியுமா ! புகைப்படம் உள்ளே

0
6294
laila-actress

லைலா என்றால் தமிழ் சினிமாவிற்கு, சிரித்தால் கன்னத்தில் குழி விழும் நடிகை என நன்றாகவே தெரியும். இவர் 1980ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி கோவாவில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே திறமைசாலியான இவர், தனது 12 வயதில் லண்டன் ஸ்கூல் ஆப் டான்சிங்கில் லண்டன் சென்று டான்சில் பட்டம் பெற்றவர்.
laila இதன் காரணமாக பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தனது 16 வயதிலேயே ஹீரோயினாக நடிக்க துவங்கிவிட்டார். 1996ஆம் ஆண்டு துஸ்மன் துணியா கா என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானாலும் பெரும்பாலும் இவர் நடித்தது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே.

தமிழில் 1999ஆம் ஆண்டு கள்ளழகர் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக அறிமுகமானார். அந்த படத்தில் அற்புதமாக நடித்த அவருக்கு பின்னர் தமிழில் வாய்ப்புகள் கொட்டத் துவங்கின.

அர்ஜுனுடன் முதல்வன், பிரசாந்துடன் பார்த்தேன் ரசித்தேன், அஜித்துடன் தீனா, சூர்யாவுடன் நந்தா, உன்னை நினைத்தது, விக்ரமுடன் தில் மற்றும் பிதமாகன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார்.
laila

lailaமேலும், 2001ல் சூர்யாவுடன் நடித்த நந்தா படத்திற்காக பிலிம்பேர் பெஸ்ட் ஆக்ட்ரஸ் அவார்ட் வாங்கினார். அதேபோல், 2003ல் பிதாமகன் படதிற்காக பிலிம்பேர் பெஸ்ட் ஆக்ட்ரஸ் அவார்ட், தமிழ்நாடு பெஸ்ட் ஆக்ட்ரஸ் அவார்ட், மற்றும் ITFA பெஸ்ட் ஆக்ட்ரஸ் அவார்ட் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

தனது 20 வயதில் இரானை சேர்ந்த மெஹதீன் என்ற ஒரு தொழில் அதிபருடன் காதல் வயப்பட்டர். கிட்டத்தட்ட 7 வருடங்கள் காதலித்த பின்னர் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கண்டிப்பாக நடிக்கப்போவதில்லை எனக் கூறினார்.
அதேபோல், திருமணத்திற்கு பிறகு அவரை இரண்டு நாடகக் கம்பெனிகள் அணுகி நாடகத்தில் நடிக்க அழைத்தன. ஆனால், கண்டிப்பா முடியாது எனக் கூறி அனுப்பிவிட்டார் லைலா. தற்போது அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. ஒருவருக்கு 10 வயதும் ஒருவருக்கு 8 வயதும் ஆகிறது. தற்போது வீட்டை கவனித்துக்கொண்டு தனது இரு மகன்களையும் பார்த்துக்கொண்டு வீட்டோடு இருக்கிறார் லைலா.