காதலுக்காக மதம் மாறி திருமணம் செய்த கமல் பட நாயகி. அனைத்து சொத்தையும் இழந்த பரிதாபம்.

0
140
- Advertisement -

மறைந்த நடிகை ஸ்ரீவித்யா வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்கள் குறித்து பலரும் அறிந்திராத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் 1970 களில் தொடங்கி 2000 ஆண்டுகளின் தொடக்கம் வரை நடித்த மிக பிரபலமான நடிகை ஸ்ரீவித்யா. இவர் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பிரபலமான கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார். ஸ்ரீவித்யாவின் தந்தைக்கு உடல் நலத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார்.

-விளம்பரம்-

அதற்குப் பிறகுதான் ஸ்ரீவித்யா தன்னுடைய 13 வயதிலேயே நடிக்க வந்தார். இவர் 1967ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகியிருந்த திருவருட்செல்வர் என்ற படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். ஆரம்பத்தில் இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தாலும் 70களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறியிருந்தார். மேலும், இவர் சிவாஜி, ரஜினி, கமல், ஜெய்சங்கர், விஜயகுமார் உட்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

- Advertisement -

ஸ்ரீவித்யா குறித்த தகவல்:

அதோடு ரஜினியின் முதல் ஹீரோயினி ஸ்ரீவித்யா என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஸ்ரீவித்யா நடித்துள்ளார். பின் இவர் 2003 ஆம் ஆண்டு மார்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அநியாயமாக இறந்தார். மேலும், ஸ்ரீவித்யா மரணப்படுக்கையில் இருக்கும் போதே தனது சொத்துக்களை எல்லாம் ஏழை குழந்தைகளுக்கு எழுதிவைத்தார். ஆனால், அது முழுமையாக போய் சேரவில்லை என்று கூறப்படுகிறது.

ஸ்ரீவித்யா தனிப்பட்ட வாழ்கை:

இந்த நிலையில் ஸ்ரீவித்யாவின் சொந்த வாழ்க்கை குறித்து பலரும் அறியாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். ஸ்ரீவித்யா அவர்கள் சினிமா துறையில் கொடிகட்டிப் பறந்தாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான சோகங்களை தாங்கி இருந்தார். இவர் மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்த ஜார்ஜ் தாமஸ் என்பவரை காதலித்தார். இவர்களுடைய காதலுக்கு ஸ்ரீவித்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

-விளம்பரம்-

ஸ்ரீவித்யா திருமண வாழ்கை:

காரணம், ஜார்ஜ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களுடைய காதலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் குடும்பத்தினரை எதிர்த்து துணிச்சலாக ஸ்ரீவித்யா கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். அதற்குப் பின் தான் ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையில் புயல்கள் அடிக்க ஆரம்பித்தது. திருமணத்திற்கு பிறகு ஸ்ரீவித்யாவின் கணவருக்கு சரியாக வேலையும் இல்லை, வருமானமும் இல்லை. இதனால் ஸ்ரீவித்யாவை தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஜார்ஜ் வற்புறுத்தினார். இதனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமானது.

ஸ்ரீவித்யா இறப்பு:

பின் ஜார்ஜிடம் இருந்து ஸ்ரீவித்யா விவாகரத்து வாங்கினார். இருந்தும் அவருடைய சொத்துக்களை எல்லாம் ஜார்ஜ் தரவே இல்லை. இது தொடர்பாக ஸ்ரீவித்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இறுதியில் அந்த வழக்கில் ஸ்ரீவித்யா வெற்றியும் பெற்றார். இருந்தாலும், உடல் ரீதியாக ஸ்ரீவித்யா பல பிரச்சனைகளை அனுபவித்திருந்தார். கடைசியில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் இறந்தார். இவருடைய இழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

Advertisement